IND vs PAK : அஷ்வினை ஏன் தெரியுமா சேர்க்கல – இந்தியாவை வெளிப்படையாக கலாய்க்கும் பாக் வீரர், ரசிகர்கள் பதிலடி

Ravichandran Ashwin
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆசிய கோப்பையில் 6 அணிகள் மோதினாலும் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டிகளுக்கு உலக அளவில் எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது. அதில் லீக் சுற்றில் முதல் முறையாக மோதிய போது பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் போராடி கடைசி ஓவரில் தோற்கடித்த இந்தியா அதே மைதானத்தில் கடந்த வருடம் டி20 உலக கோப்பையில் பரிசளித்த வரலாற்று தோல்விக்கு தக்க பதிலடி கொடுத்தது. அதனால் தலைகுனிவை சந்தித்த பாகிஸ்தான் ஹாங்காங்கை புரட்டி எடுத்து சூப்பர் 4 சுற்றில் கிடைத்த 2வது வாய்ப்பில் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் கடைசி நேரத்தில் சிறப்பாகச் செயல்பட்டு அதே 5 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்று அந்த தோல்விக்கு பழி தீர்த்துக் கொண்டது.

மறுபுறம் அந்த தோல்வியால் தலைகுனிந்த இந்தியா 2016, 2018 ஆகிய அடுத்தடுத்த ஆசிய கோப்பைகளில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் 7 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று வந்த வெற்றிநடை முடிவுக்கு வந்தது. இதனால் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிரான எஞ்சிய 2 சூப்பர் 4 போட்டிகளில் வென்றால் மட்டுமே பைனலுக்கு செல்ல முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலையும் நடப்புச் சாம்பியன் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. முன்னதாக இந்த தொடரில் விமர்சனங்களுக்கு மத்தியில் சேர்க்கப்பட்டுள்ள நட்சத்திர அனுபவ சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இதுவரை களமிறங்கி விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

வாய்பில்லாமல் அஷ்வின்:
ஆனால் அவருக்கு பதில் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக விளையாடி வரும் யுஸ்வென்ற சஹால் இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பந்து வீசாமல் சுமாராக செயல்படுவது பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் 4 ஓவர்கள் வீசிய அவர் 1 விக்கெட் எடுத்தாலும் 43 ரன்களை 10.75 என்ற மோசமான எக்கனாமியில் சுமாராக பந்து வீசினார். அதனால் அடுத்து வரும் போட்டிகளில் தமிழகத்தின் அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்குமாறு நிறைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை வைக்கிறார்கள்.

பயம் இருக்கும்ல:
இந்நிலையில் 2014 ஆசிய கோப்பையில் தங்களது அணியின் ஷாகித் அப்ரிடியிடம் அடிவாங்கிய அஷ்வின் தோல்விக்கு காரணமாக அமைந்ததை இந்தியா இன்னும் மறக்காமல் இருப்பதாலேயே இந்த ஆசிய கோப்பையில் இதுவரை அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ் கலாய்த்துள்ளார். கடந்த 2014இல் வங்கதேசத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்தியா வெற்றிக்காகப் போராடி கடைசி ஓவர் வரை போட்டியை எடுத்து வந்தது.

- Advertisement -

அப்போது கடைசி ஓவரில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட போது அதை வீசிய அஷ்வின் முதல் பந்திலேயே சயீத் அஜ்மலை அவுட் செய்தார். ஆனால் மறுபுறம் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த அப்ரிடி 3, 4 ஆகிய பந்துகளில் அடுத்தடுத்த மெகா சிக்ஸர்களை பறக்க விட்டு வெறும் 1 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தார். அந்த தோல்வியை பெரும்பாலான இந்திய ரசிகர்கள் இன்னும் மறக்காமல் இருக்கும் நிலையில் அந்த தோல்வியிலிருந்து தான் அஷ்வினை தொடர்ச்சியாக இந்திய வெள்ளைப் பந்து அணியில் சேர்ப்பதற்கு இந்தியா பயப்படுவதாக முகமது ஹபீஸ் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த போட்டியில் அஷ்வினிடம் அவுட்டானாலும் 75 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஆட்டநாயகன் விருதை வென்ற முகமது ஹபீஸ் அதற்கான முழு பாராட்டுக்கும் ஷாஹித் அப்ரிடி சொந்தக்காரர் என்று ஏளனமாகக் பேசியுள்ளார். இதனால் கொந்தளிக்கும் இந்திய ரசிகர்கள் அதன்பின் அஷ்வின் தொடர்ச்சியாக இந்திய அணியில் விளையாடவில்லை என்பதை ஏற்ற்க்கொள்கிறோம். ஆனால் அந்த வெற்றிக்கு பின் 2016இல் அதே அப்ரிடியை கேப்டனாக வைத்துக்கொண்டும்.

- Advertisement -

2018இல் நீங்கள் இருவரும் இல்லாமலும் இந்தியாவை தோற்கடிக்க முடியாமல் பாகிஸ்தான் மண்ணைக் கவ்வியது நினைவில்லையா என்று முகமது ஹபீஸ்க்கு இந்திய ரசிகர்கள் நெத்தியடி பதில் கொடுக்கின்றனர். மேலும் சாதாரண ஆசிய கோப்பையிலேயே 2016 – 2022 வரை 4 போட்டிகளில் தொடர்ச்சியாக தோற்று இந்தியாவை தோற்கடிக்க 7 வருடங்கள் தேவைப்பட்ட உங்களுக்கு இந்த வாய்ச்சவடால் தேவையா என்றும் ரசிகர்கள் பதிலடி கொடுக்கின்றனர்.

இதையும் படிங்க : IND vs SL : இலங்கை அணிக்கெதிரான இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் – பிளேயிங் லெவன் இதுதான்

இப்படி வழக்கம்போல ஏளனமாகப் பேசும் பாகிஸ்தானுக்கு சூப்பர் 4 சுற்றில் எஞ்சிய போட்டிகளில் வென்று ஃபைனலுக்கு தகுதி பெற்று எதிரணியாக வரும் என்று கருதப்படும் பாகிஸ்தானை இந்தியா மீண்டும் தோற்கடித்து இவரது முகத்தில் கரியை பூசுமா என்று இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement