IND vs SL : இலங்கை அணிக்கெதிரான இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் – பிளேயிங் லெவன் இதுதான்

IND
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது லீக் சுற்று போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி “சூப்பர் 4”-க்குள் நுழைந்தது. ஆனால் “சூப்பர் 4” சுற்றில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 181 ரன்களை குவித்தும் இந்திய அணி தோல்வியை தழுவியது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது.

INDvsSL

- Advertisement -

இந்நிலையில் இந்த “சூப்பர் 4” சுற்றில் இந்திய அணியின் இரண்டாவது ஆட்டமாக இலங்கை அணிக்கு எதிரான போட்டி இன்று இரவு 7:30 மணிக்கு துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை இந்திய அணி இழந்துள்ளதால் இனி வரும் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

அதுமட்டுமின்றி இந்த இரண்டு போட்டிகளிலும் நல்ல ரன்ரேட்டில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும் என்பதன் காரணமாக இந்த இரண்டு போட்டியிலும் இந்திய அணி மும்முரம் காட்டும் என்று தெரிகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அணி தேர்வில் ஏகப்பட்ட சொதப்பல்களை செய்த இந்திய அணி இம்முறை அதை அதனை சரி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Arshdeep-Singh

அந்த வகையில் இலங்கை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட் நீக்கப்பட்டு மீண்டும் தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக விளையாட வாய்ப்புள்ளது. அதேபோன்று ரவி பிஷ்னாய் நீக்கப்பட்டு ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் அணியில் இடம் பெறுவார் என்றும் தெரிகிறது. அதனை தவிர்த்து ஆவேஷ் கான் விளையாடும் அளவிற்கு ஃபிட்டாக இருந்தால் அவரும் அணியில் இணைவார் என்று தெரிகிறது.

- Advertisement -

இந்த குறிப்பிட்ட மாற்றங்களை தவிர்த்து இந்திய அணியில் வேற எந்த மாற்றமும் பெரிதாக நடைபெறாது என்று தெரிகிறது. அதன்படி இலங்கை அணிக்கு எதிரான இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : இந்தியாவுக்கு சேன்ஸ்ஸே இல்ல. ஆசியக்கோப்பையை ஜெயிக்கப்போவது அவங்கதான் – சேவாக் கணிப்பு

1) ரோஹித் சர்மா, 2) கே.எல் ராகுல், 3) விராட் கோலி, 4) சூரியகுமார் யாதவ், 5) ஹார்டிக் பாண்டியா, 6) தினேஷ் கார்த்திக், 7) தீபக் ஹூடா, 8) அக்சர் பட்டேல், 9) புவனேஷ்வர் குமார், 10) அர்ஷ்தீப் சிங், 11) யுஸ்வேந்திர சாஹல்

Advertisement