இந்தியாவுக்கு சேன்ஸ்ஸே இல்ல. ஆசியக்கோப்பையை ஜெயிக்கப்போவது அவங்கதான் – சேவாக் கணிப்பு

Sehwag
- Advertisement -

கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்கிய ஆசியக்கோப்பை தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் என ஆறு அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் வங்கதேசம் மற்றும் ஹாங்காங் அணிகளை தவிர்த்து மீதமுள்ள நான்கு அணிகளும் தற்போது “சூப்பர் 4” சுற்றில் விளையாடி வருகிறது. இந்த “சூப்பர் 4” சுற்றில் முதல் இரு இடங்கள் பிடிக்கும் இரு அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும்.

IND vs PAk Rahul Hardik Pandya

- Advertisement -

இந்த ஆசிய கோப்பை தொடரின் லீக் சுற்று போட்டிகளில் சிறப்பாக விளையாடி “சூப்பர் 4”-க்குள் நுழைந்த இந்திய அணியானது “சூப்பர் 4” சுற்றின் முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது அனைவரையும் வருத்தம் அடையச் செய்துள்ளது. ஏனெனில் அடுத்து வரும் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிகளில் பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணிக்கு இறுதிப்போட்டியில் விளையாட ஒரு வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடரினை கைப்பற்றப்போவது எந்த அணி என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் நிலவி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் இந்த ஆசிய கோப்பை தொடரினை ஜெயிக்கப் போவது யார்? என்பது குறித்த தனது கருத்தினை வெளிப்படையாக அறிவித்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில் :

INDvsPAK

இந்தியா இன்னும் ஒரு போட்டியை இழந்தால் கூட இந்த தொடரில் இருந்து வெளியேறிவிடும். அதேசமயம் ஏற்கனவே பாகிஸ்தான அணி இந்த “சூப்பர் 4” சுற்றின் முதல் ஆட்டத்தில் இந்திய அணியை வீழ்த்தி உள்ளதால் இன்னும் ஒரு போட்டியில் அவர்கள் வெற்றி பெற்றால் கூட இறுதிப் போட்டிக்கு செல்வார்கள். என்னை பொறுத்தவரை இந்தியா இந்த ஆசிய கோப்பை தொடரை கைப்பற்றாது. இம்முறை பாகிஸ்தான் அணி ஆசியக்கோப்பையை கைப்பற்ற அதிக வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

ஏனெனில் அவர்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணியை வீழ்த்தியுள்ளனர். அதுமட்டுமின்றி தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் சூழல் அவர்களுக்கு நன்றாக பழக்கப்பட்ட ஒன்று என்பதன் காரணமாக நிச்சயம் பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வெல்லும் என சேவாக் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தானால் உடைக்க முடியாத இந்தியாவின் 5 சூப்பர் சாதனைகளின் பட்டியல்

கடந்த 2018 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை நடைபெற்ற போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றிருந்த வேளையில் நடப்பு சாம்பியனாக மீண்டும் இந்த ஆண்டு தொடரை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியது. மேலும் எதிர்வரும் இரண்டு போட்டிகளில் ஒன்றில் தோற்றால் கூட இந்திய அணி இந்த தொடரில் இருந்து வெளியேறுவதை தவிர வேறு வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement