சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தானால் உடைக்க முடியாத இந்தியாவின் 5 சூப்பர் சாதனைகளின் பட்டியல்

pakisthan IND vs PAK
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் ஆசிய கண்டத்தின் டாப் 2 அணிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகளுக்கு நிகரான பலத்துடன் சவால் கொடுக்கும் அணிகளாகும். அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் தங்களது தேசிய விளையாட்டை மறக்கும் அளவுக்கு கிரிக்கெட்டை உயிராகவும் உணர்வாகவும் நினைத்து எப்போதுமே வெற்றி பெறுவதற்காக முழு மூச்சுடன் போராடுவார்கள். அதிலும் இவ்விரு அணிகள் மோதும் போது அதை கிரிக்கெட்டாக பார்க்காமல் கௌரவமாக கருதுவதால் அதில் வெற்றி பெறுவதற்கு ஆக்ரோசமாக மோதிக் கொள்வார்கள். அதனால் இவ்விரு அணிகள் மோதும் போட்டிகளில் போட்டிகளில் அனல் பறக்கும் என்ற நிலையில் எப்போதுமே இந்தியா பெரிதா அல்லது பாகிஸ்தான் பெரிதா என்பதே இவ்விரு நாட்டு அணிகளைச் சேர்ந்த ரசிகர்களின் விவாதமாக இருக்கும்.

IND vs PAK Babar Azam Rohit Sharma

- Advertisement -

அதில் நிறைய தருணங்களில் பாகிஸ்தானை பந்தாடும் அணியாக இந்தியா இருந்தாலும் அதற்கு ஈடாக பதிலடி கொடுக்கும் அணியாக பாகிஸ்தான் இருந்து வருகிறது. மேலும் வாசிம் அக்ரம், இம்ரான் கான் போன்ற தரமான வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்கும் நாடு பாகிஸ்தான் என்றால் சுனில் கவாஸ்கர், சச்சின் டென்டுல்கர், விராட் கோலி என உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களை உருவாக்கும் தொழிற்சாலையாக இந்தியா விளங்குகிறது. அப்படி சரி சமமான பலத்தைக் கொண்ட இவ்விரு அணிகளில் எப்போதுமே இந்தியா சற்று ஆதிக்கத்தை செலுத்தக்கூடிய அணியாக திகழ்கிறது.

5 சாதனைகள்:
எடுத்துக்காட்டாக பாகிஸ்தான் 1992இல் மட்டும் உலகக்கோப்பையை வென்ற நிலையில் இந்தியா 1983, 2011இல் 60 ஓவர், 50 ஓவர் ஆகிய 2 விதமான உலகக் கோப்பைகளை வென்ற ஒரே ஆசிய அணியாக திகழ்வதை சொல்லலாம். அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தானால் தொடமுடியாத இந்தியாவின் சில சாதனைகளைப் பற்றி பார்ப்போம்:

Hardik Padnday IND vs PAk

5. அதிக 200: நவீன கிரிக்கெட்டில் ரசிகர்களின் அபிமானமாக உருவாகியுள்ள டி20 கிரிக்கெட்டில் ரசிகர்களை மகிழ்வித்து 200 ரன்கள் எடுத்தால் கிட்டத்தட்ட வெற்றி நிச்சயம் என்பது தாரக மந்திரம். அந்த வகையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை 21 போட்டிகளில் 200 ரன்களை பதிவு செய்து இந்தியா சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

மறுபுறம் 10 போட்டிகளில் மட்டுமே பாகிஸ்தான் 200 ரன்களை எடுத்துள்ளது. ஆனால் 200 ரன்களை எடுப்பது சுலபமான காரியமல்ல என்ற நிலைமையில் தங்களை விட பாதியளவு அதிகமாக எடுத்துள்ள இந்தியாவின் இந்த சாதனையை பாகிஸ்தான் தொடுவது கடினமான ஒன்றாகும்.

IND

pak vs aus

4. சொந்த மண்ணில் கில்லி: பொதுவாகவே அவரவர் சொந்த மண்ணில் அவரவர் ராஜா என்பார்கள். அந்த வகையில் கிரிக்கெட்டின் உயிர்நாடியான டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணை கோட்டையாக வைத்துள்ள இந்தியா 112 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. மேலும் கடந்த 2012க்குப்பின் எந்த ஒரு தொடரிலும் தோல்வியடையாமல் வெற்றி நடை போட்டு வருகிறது.

- Advertisement -

மறுபுறம் சொந்த மண்ணில் வெறும் 60 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ள பாகிஸ்தான் 2022 ஏப்ரல் மாதம் தார் ரோட் போல பிட்ச்களை அமைத்தும் ஆஸ்திரேலியாவிடம் 1 – 0 (3) என்ற கணக்கில் மண்ணைக் கவ்வியது.

3. அசால்ட்டான நாக்-அவுட்: கிரிக்கெட்டில் ஒரு அணியின் தரத்தை ஐசிசி நடத்தும் தொடர்களின் செயல்பாடுகளை வைத்தே தீர்மானிக்கப்படும். குறிப்பாக ஒரு உலகக்கோப்பையில் லீக் சுற்றில் அனைத்து அணிகளும் பங்கேற்றாலும் நாக் அவுட் சுற்றை தொடுவதற்கு சிறப்பாக செயல்படுவது அவசியமாகும்.

- Advertisement -

அந்த வகையில் இதுவரை நடைபெற்ற 50 ஓவர் ஐசிசி உலக கோப்பைகளில் 26 முறை இந்தியா நாக்-அவுட் சுற்று போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளது. மறுபுறம் பாகிஸ்தான் 18 முறை மட்டுமே நாக்-அவுட் சுற்றுக்கு சென்றது.

indvsaus

2. ஆஸ்திரேலியாவின் கிங்: பொதுவாக கிரிக்கெட்டின் முடிசூடா மன்னனாக திகழும் ஆஸ்திரேலியாவை எந்த ஒரு போட்டியிலும் வீழ்த்துவது எதிரணிக்கு கடினமாகும். அதிலும் வேகத்துக்கு சாதகமான ஆடுகளங்களை கொண்ட ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் தோற்கடிப்பதெல்லாம் சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களில் வளர்ந்த இந்தியா, பாகிஸ்தான் போன்ற ஆசிய அணிகளுக்கு குதிரைக் கொம்பாகும்.

அந்த வகையில் 70 வருடங்களாக தோற்று வந்த இந்தியா 2018/19இல் முதல் முறையாக விராட் கோலி தலைமையில் 2 – 1 (4) என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணியாக சாதனை படைத்தது. அதற்கடுத்த 2020/21இல் டேவிட் வார்னர், ஸ்மித் அடங்கிய வலுவான ஆஸ்திரேலியாவை ரகானே தலைமையிலான இந்தியா மீண்டும் 2 – 1 (4) என்ற கணக்கில் தோற்கடித்தது. எனவே இந்தியாவை போல் ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் தொடரையும் அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களையும் வெல்வது பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல இலங்கை போன்ற இதர ஆசிய அணிகளுக்கும் சிம்ம சொப்பணமாகும்.

sachin

1. உலககோப்பை ராஜா: 1992 முதல் தொடர்ச்சியாக பாகிஸ்தானை உலக கோப்பைகளில் தோற்கடித்த இந்தியா 12 வெற்றிகளை (7 50 ஓவர் + 5 20 ஓவர்) பதிவு செய்து உலக சாதனை படைத்தது.

அந்த வெற்றி நடைக்கு கடந்த வருடம் நடந்த டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் 29 வருடங்கள் கழித்து தான் பாகிஸ்தான் முற்றுப்புள்ளி வைத்தது. அந்த வகையில் 12 – 1 என்ற கணக்கில் இந்த சாதனையில் முன்னிலை வகிக்கும் இந்தியாவை பாகிஸ்தான் பின் தள்ளுவதற்கு மிகமிக வாய்ப்புகள் குறைவாகும்.

Advertisement