அந்த ஒரு பாகிஸ்தான் பவுலரே விராட் கோலியை அடக்கி ரோஹித்தை தெறிக்க விடுவாரு பாத்துகோங்க – இந்தியாவை எச்சரித்த ப்ராட் ஹாக்

Brad Hogg
- Advertisement -

கோலாகலமாக துவங்கியுள்ள ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் கத்துக்குட்டி நேபாளை அடித்து நொறுக்கிய பாகிஸ்தான் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனால் குரூப் ஏ பிரிவின் புள்ளி பட்டியலில் 2 புள்ளிகளை பெற்று முதல் இடம் பிடித்துள்ள பாகிஸ்தான் அடுத்ததாக தன்னுடைய 2வது போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது. அதில் தற்சமத்தில் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருக்கும் பாகிஸ்தானை சமாளித்து இந்தியா வெல்லுமா என்ற எதிர்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது. இவ்விரு அணிகளை பொறுத்த வரை பாகிஸ்தான் வீரர்கள் எந்த காயத்தையும் சந்திக்காததால் முழுவதும் ஃபிட்டான அணியாக பார்க்கப்படுகிறது.

மறுபுறம் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் காயத்திலிருந்து குணமடைந்து எவ்விதமான போட்டிகளிலும் விளையாடாமல் நேரடியாக இந்த ஆசிய கோப்பையில் களமிறங்கும் நிலையில் கேஎல் ராகுல் மீண்டும் காயத்தை சந்தித்து ஆரம்பக்கட்ட போட்டிகளிலிருந்து வெளியேறியுள்ளார். ஆனால் இந்திய அணியின் மிடில் ஆர்டர் மிகவும் பலவீனமாக இருப்பதால் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி ஆகியோர் அடங்கிய டாப் ஆர்டர் மிகவும் சிறப்பாக செயல்படுவது அவசியமாகிறது.

- Advertisement -

இந்தியாவுக்கு எச்சரிக்கை:
ஆனால் பாகிஸ்தானின் நட்சத்திர இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அப்ரிடி தற்சமயத்தில் உச்சகட்ட ஃபார்மில் இருந்து முதல் ஓவரிலேயே கேரண்டியாக ஒரு சில விக்கெட்களை எடுத்து எதிரணிகளுக்கு சவாலை கொடுக்கிறார். குறிப்பாக புதிய பந்தை ஸ்விங் செய்து வலது கை பேட்ஸ்மேன்களுக்கு பவர் ஃபிளே ஓவர்களில் பெரிய சவாலை கொடுக்கும் அவர் 2021 டி20 உலகக்கோப்பை உட்பட கடந்த காலங்களில் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்றவர்களுக்கு அதிகமாகவே தொல்லை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் அப்போட்டியில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரை ஷாஹின் அப்ரிடி வீழ்த்த அதிக வாய்ப்புள்ளதால் இந்தியா எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ப்ராட் ஹோக் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் நிச்சயமாக அந்த போட்டியை பார்ப்பேன். ஏனெனில் அது நாம் பார்க்கப்போகும் மிகப்பெரிய போட்டியாகும். அரசியல் என்பது விளையாட்டில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அனைத்து இடங்களிலும் இருக்கிறது”

- Advertisement -

“அதனால் நாமும் 2 தரமான அணிகள் மோதுவதை பார்ப்பதை தவற விடுகிறோம். இவ்விரு அணிகளை பொறுத்த வரை இந்தியா பேட்டிங்கில் வலுவாக இருக்கிறது. மறுபுறம் பாகிஸ்தான் தங்களுடைய வேகப்பந்து வீச்சு கூட்டணியில் வலுவாக இருக்கிறது. குறிப்பாக முழுமையான வேகத்தில் பந்தை ஸ்விங் செய்து வலது கை பேட்ஸ்மேன்களுக்கு உள்ளே கொண்டு வந்து சவாலை கொடுக்கும் இடது கை ஷாஹின் அப்ரிடி மிகவும் தரமான பவுலர்”

இதையும் படிங்க: வீடியோ : அதே துல்லியமான ஸ்விங், அதே பழைய புவியாக மிரட்டல் – மீண்டும் இந்திய அணியில் கம்பேக் கொடுப்பாரா

“எனவே வலது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அவர் பெரிய சவாலை கொடுப்பார் என்று நினைக்கிறேன். அதனால் இப்போட்டியின் ஆரம்பத்திலேயே ஷாஹின் அப்ரிடி புதிய பந்தை பயன்படுத்தி விராட் கோலியை சாய்த்தால் பாகிஸ்தானுக்கு அதிக வாய்ப்பு ஏற்படும். எனவே சாகின் அப்ரிடி மற்றும் இந்தியாவின் டாப் 3 பேட்ஸ்மேன்களுக்கு இடையேயான ஆட்டம் தான் இப்போட்டியின் வெற்றியை தீர்மானிக்கும்” என்று கூறினார்.

Advertisement