அதே துல்லியமான ஸ்விங், அதே பழைய புவியாக மிரட்டல் – மீண்டும் இந்திய அணியில் கம்பேக் கொடுப்பாரா

Bhuvneswar Kumar
- Advertisement -

நட்சத்திர இந்திய வீரர் புவனேஸ்வர் குமார் சமீப காலங்களாக இந்திய அணியில் வாய்ப்புகள் கிடைக்காமல் தடுமாறி வருகிறார். கடந்த 2012ஆம் ஆண்டு தோனி தலைமையில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் புதிய பந்தை ஸ்விங் செய்து பவர் பிளே ஓவர்களில் விக்கெட்களை எடுத்து அனைவரது கவனத்தை எடுத்தார். அதே போல டெத் ஓவர்களில் நல்ல லைன், லென்த் போன்றவற்றை பின்பற்றி குறைந்த ரன்களை கொடுத்து அசத்திய அவர் குறுகிய காலத்திலேயே நிலையான இடத்தை பிடித்து 3 வகையான இந்திய அணியிலும் முதன்மை பவுலராக உருவெடுத்து வெற்றிகளில் பங்காற்றினார்.

அதே போலவே காட்டுத்தனமாக அடிக்கும் பேட்ஸ்மேன்களை கொண்ட ஐபிஎல் தொடரிலும் வெற்றிகரமாக செயல்பட்ட அவர் புவனேஸ்வர் குமார் என்றாலே துல்லியத்திற்கு பெயர் போனவர் என்று ரசிகர்களால் பாராட்டப்பட்டு 2015, 2019 உலகக்கோப்பை வரை இந்திய அணியிலும் நிலைத்து விளையாடி வந்தார். இருப்பினும் அதன் பின் சந்தித்த காயத்தால் தடுமாறிய அவர் 2021, 2022 டி20 உலகக் கோப்பைகளில் முன்பு போல் தாக்கத்தை ஏற்படுத்தாமல் சுமாராக பந்து வீசினார்.

- Advertisement -

கம்பேக் கொடுப்பாரா:
மறுபுறம் பும்ரா, சிராஜ் போன்ற அடுத்த தலைமுறை பவுலர்கள் வந்து நிலையான இடத்தை பிடித்து விட்டதால் சமீப காலங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. அதை தொடர்ந்து தம்முடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பயோவை இந்தியர் மட்டும் என சமீபத்தில் அவர் மாற்றியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. அந்த நிலைமையில் தற்போது தம்முடைய சொந்த மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடைபெறும் யுபி டி20 லீக் தொடரில் நொய்டா சூப்பர் கிங்ஸ் அணிக்காக புவனேஸ்வர் குமார் விளையாடுகிறார்.

நிதிஷ் ராணா தலைமை தாங்கும் அந்த அணிக்காக விளையாடும் புவனேஸ்வர் குமார் ஆகஸ்ட் 30ஆம் தேதி நடைபெற்ற கான்பூர் சூப்பர்ஸ்டார்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் தன்னுடைய தரத்தை காட்டும் வகையில் புதிய பந்தை ஸ்விங் செய்து ஆரம்பத்திலேயே ஓப்பனிங் பேட்ஸ்மேன் சமீர் ரிஸ்வியை க்ளீன் போல்ட்டாக்கினார். அடுத்த சில ஓவர்களில் அக்ஷ்தீப் நாத்தையும் அவுட்டாக்கிய அவர் மொத்தமாக 4 ஓவரில் வெறும் 16 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து மிகவும் துல்லியமாக செயல்பட்டார்.

- Advertisement -

அவரது சிறப்பான பந்து வீச்சின் உதவியுடன் நொய்டா சூப்பர் கிங்ஸ் 16 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது. அதே போல ரிங்கு சிங், சிவம் மாவி, துருவ் ஜுரேல், மோசின் கான் போன்ற இதர இளம் நட்சத்திர வீரர்களும் அந்த அணியில் விளையாடி வெற்றியில் பங்காற்றினர். முன்னதாக தினேஷ் கார்த்திக், ரகானே போன்ற நிறைய சீனியர் வீரர்கள் உள்ளூர் அளவில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியில் கேரியர் முடிந்ததாக கருதப்பட்ட போது கம்பேக் கொடுத்துள்ளார்கள்.

இதையும் படிங்க: வீடியோ : 28 பந்தில் 64 ரன்கள் டிம் டேவிட் அதிரடி. இறுதியில் அவரையே மிரள வைத்த கேட்ச் – தெம்பா பவுமா அபாரம்

அந்த வகையில் தற்போது 33 வயது மட்டுமே நிரம்பியுள்ள புவனேஷ்வர் குமார் இதே போல உள்ளூரில் விளையாடி அடுத்த வருட ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இந்தியாவுக்காக விளையாடுவதற்கான வாய்ப்பு உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement