IND vs PAK : இந்தியா பாக் போட்டி. ஷாஹீன் அப்ரிடி விளையாடமாட்டாரா? – வெளியான உண்மை விவரம் இதோ

Shaheen-Afridi
- Advertisement -

உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் 16-வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நேற்று ஆகஸ்ட் 30-ஆம் தேதி முல்தான் நகரில் கோலாகலமாக துவங்கியது. இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகள் மோதிய வேளையில் பாகிஸ்தான் அணி நேபாள் அணிய எளிதில் 238 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதற்கு அடுத்து பாகிஸ்தான் அணியானது இந்திய அணிக்கு எதிராக தங்களது இரண்டாவது போட்டியில் விளையாட இருக்கிறது.

அதன்படி செப்டம்பர் 2-ஆம் தேதி நடைபெறும் இந்த இந்தியா பாகிஸ்தான் போட்டி அனைவரது மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள வேளையில் இந்த தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியும் விளையாட இருக்கிறது. இந்த போட்டி இவ்விரு அணிளுக்கும் இடையே முக்கியமான போட்டி என்பதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இடையேயான இந்த போட்டியில் அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் அப்ரிடி விளையாடுவாரா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய ஷாஹீன் அப்ரிடி குறிப்பிட்ட ஒரு ஓவரை வீசி விட்டு பவுண்டரி லைனில் நின்றிருந்தபோது அணியின் மருத்துவர் மற்றும் பிசியோ ஆகிய இருவரும் அவரை பரிசோதித்து கொண்டிருந்ததனர்.

அதன்காரணமாக அவருக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டு விட்டதோ? என்று பலரும் அச்சமடைந்தனர். அதோடு பவுண்டரி லைனில் நின்றிருந்த அவரும் அணியின் மருத்துவர் மற்றும் பிசியோவுடன் ஆலோசனை நடத்தியதால் அடுத்த போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் இருந்துள்ளது. ஏற்கனவே காயமடைந்த அவர் பி.எஸ்.எல் தொடருக்கு பிறகு தற்போது தான் மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.

- Advertisement -

அவருடன் நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ரவூப் என அதிவேக பந்துவீச்சாளர்கள் இணைந்துள்ளதால் இந்த தொடரில் பாகிஸ்தான் அணியின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஷாஹீன் அப்ரிடி இந்திய அணிக்கு எதிராக போட்டியில் விளையாடுவாரா? மாட்டாரா? என்பது குறித்த கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. அதன்படி நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் சில பிரச்சனைகளை சந்தித்தாலும் அவர் மருத்துவர் மற்றும் பிசியோதெரபிஸ்ட் ஆகியோருடன் ஆலோசனைகளை கொண்டார்.

இதையும் படிங்க : பும்ராவும் இல்ல. சுப்மன் கில்லும் இல்ல. இந்திய அணி உலகக்கோப்பையை ஜெயிக்க இவங்க 2 பேர் தான் முக்கியம் – கங்குலி கருத்து

அதன் பிறகு அவர் ஓய்வறைக்கும் சென்றதால் அடுத்த போட்டியில் விளையாட மாட்டார் என்று பலராலும் பேசப்பட்டது. ஆனால் இதன் உண்மை விவரம் யாதெனில் : மருத்துவர் மற்றும் பிசியோ தெரபி என இருவருடனும் அவர் பேசியிருந்தாலும் ஓய்வறைக்கு சென்றதற்கு காரணம் யாதெனில் : அவரது டீ ஷர்ட்டை மாற்றுவதற்காக தான் என்றும் மைதானத்தில் நிலவிய வெப்பம் காரணமாக அவர் உடலில் அதிகளவு வியர்வை கசிந்ததாலே அதனை சரி செய்ய அவர் உடை மாற்றினார் என்றும் அதைதவிர வேறு ஏதும் அவருக்கு காயம் இல்லை என்பதனாலும் இந்தியா பாகிஸ்தான் போட்டியில் அவர் விளையாடுவார் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement