வீடியோ : 1 ரன்னில் மீண்டும் கோப்பை வென்ற அப்ரிடி அணி, ரசிகர்கள் பார்வையில் ஐபிஎல் தொடரை மிஞ்சியதாக நஜாம் சேதி பேட்டி

PSL
- Advertisement -

பாகிஸ்தானின் பிரபல பிஎஸ்எல் டி20 கிரிக்கெட் தொடரின் 2023 சீசன் கடந்த ஒரு மாதமாக அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் மற்றும் பிளே ஆஃப் சுற்றின் முடிவில் நடப்பு சாம்பியன் லாகூர் குவாலண்டர்ஸ் மற்றும் முல்தான் சுல்தான்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. அதைத்தொடர்ந்து கடாஃபி மைதானத்தில் மார்ச் 18ஆம் தேதியான நேற்று நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தல் லாகூர் 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 200/6 ரன்கள் குவித்தது.

அந்த அணிக்கு பெய்க் 30 (18), பக்கார் ஜமான் 39 (34), சபிக் 65 (40) என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக நல்ல ரன்களை எடுத்தாலும் சாம் பில்லிங்ஸ் 9, பாட்த்டி 0, சிக்கந்தர் ராசா 1 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனால் கடைசி நேரத்தில் யாருமே எதிர்பாராத வகையில் 2 பவுண்டரி 5 சிக்ஸர்களை தெறிக்க விட்ட கேப்டன் ஷாஹீன் அப்ரிடி 44* (15) ரன்கள் விளாசி மாஸ் பினிஷிங் கொடுக்க முல்தான் சார்பில் அதிகபட்சமாக உஸ்மா மிர் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

இந்தியாவை மிஞ்சிட்டோம்:
அதை தொடர்ந்து 201 ரன்களை துரத்திய முல்தான் அணிக்கு உஸ்மான் கான் 18 (12) கேப்டன் முகமது ரிஸ்வான் 34 (23) ரிலீ ரோசவ் 52 (32) என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன்களை குவித்தும் கைரன் பொல்லார்ட் 19, டிம் டேவிட் 20, அன்வர் அலி 1, உஸ்மா மிர் 0 என அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் பரபரப்பு நிறைந்த அந்த போட்டியில் ஜமான் கான் வீசிய கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட போது 17* (6) ரன்கள் எடுத்திருந்த அப்பாஸ் அஃப்ரிடி போராடியும் கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்ட போது மறுபுறம் போராடிய குஷ்தில் ஷா 2 ரன்கள் மட்டுமே எடுத்து 25 (12) ரன்களில் ரன் அவுட்டானார்.

அதனால் பிஎஸ்எல் வரலாற்றில் முதல் முறையாக ஃபைனலில் வெறும் 1 ரன்னில் திரில் வெற்றி பெற்ற லாகூர் ஷாஹீன் அப்ரிடி தலைமையில் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து 2வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது. அப்படி பரபரப்பாக நடைபெற்ற இந்த தொடரை டிஜிட்டல் வாயிலாக 150 மில்லியன் ரசிகர்கள் பார்த்ததாக தெரிவிக்கும் பாகிஸ்தான் வாரிய தலைவர் நஜாம் சேதி 2023 பிஎஸ்எல் தொடர் 130 மில்லியன் ரசிகர்கள் மட்டும் பார்த்த ஐபிஎல் தொடரை மிஞ்சியதாக கூறியுள்ளார்.

- Advertisement -

அதாவது 2015ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் 8வது சீசனை 130 மில்லியன் ரசிகர்கள் மட்டுமே பார்த்ததாக தெரிவிக்கும் அவர் தற்போதைய பிஎஸ்எல் தொடரின் 8வது சீசனை 150 மில்லியன் ரசிகர்கள் பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது பற்றி ஃபைனலுக்கு பின் அவர் கொடுத்த அறிக்கையுடன் பாகிஸ்தான் வாரிய நிர்வாகி பேசியது பின்வருமாறு.

“அதிகப்படியான ரசிகர்கள் மற்றும் டிக்கெட் விற்பனையில் இம்முறை சாதனை நிகழ்ந்துள்ளது. அதே போல் டிஜிட்டல் பற்றி பேசும் போது பிஎஸ்எல் தொடர் தற்போது பாதி நிலையில் தான் இருக்கிறது. இந்த நிலைமையில் பொதுவாக 0.5 என்றளவில் இருக்கக்கூடிய பிஎஸ்எல் தொடரின் டிவி ரேட்டிங் தற்போது 11 தாண்டியுள்ளது. இது வரும் காலங்களில் 18 அல்லது 20 தாண்டலாம். 150 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இத்தொடரை டிஜிட்டல் நுட்பத்தில் பார்த்துள்ளனர். இது அவ்வளவு சிறியதல்ல. இதே சமயத்தில் ஐபிஎல் தொடரின் டிஜிட்டல் ரேட்டிங் 130 மில்லியனாகும். ஆனால் பிஎஸ்எல் தொடர் 150 கடந்துள்ளது. எனவே இது பாகிஸ்தானின் பெரிய வெற்றியாகும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: IND vs AUS : இஷான் கிஷனோடு சேர்த்து மேலும் ஒரு வீரரை அணியில் இருந்து கழட்டி விட்ட ரோஹித் – மாற்றம் எதற்கு?

இருப்பினும் 2015இல் இருந்த மொபைல் பயன்பாடுகளுக்கும் இப்போதுள்ள மொபைல் பயன்பாடுகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் பாகிஸ்தான் இப்படி பேசுவதை பார்த்து வழக்கம் போல இந்திய ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement