IND vs AUS : இஷான் கிஷனோடு சேர்த்து மேலும் ஒரு வீரரை அணியில் இருந்து கழட்டி விட்ட ரோஹித் – மாற்றம் எதற்கு?

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது இன்று விசாகப்பட்டினம் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதன்படி தற்போது இந்திய அணி முதலில் பேட்டி செய்து வருகிறது.

IND vs AUS KL Rahul Jadeja

- Advertisement -

ஏற்கனவே நடைபெற்ற முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து இந்த இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற முனைப்பு காட்டும். அதே வேளையில் முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய ஆஸ்திரேலிய அணி முனைப்பு காட்டும்.

இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த இரண்டாவது ஒருநாள் போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முதல் போட்டியின் போது விடுப்பு எடுத்துக் கொண்ட கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதால் அவருக்கு பதிலாக இஷான் கிஷன் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

Rohith

இந்த ஒரு மாற்றத்தை தவிர்த்து இந்த இரண்டாவது போட்டியில் வேறுயெந்த மாற்றமும் இருக்காது என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியான ஒரு முடிவை கையில் எடுத்துள்ளார்.

- Advertisement -

அதன்படி முதலாவது போட்டியில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான அக்சர் பட்டேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : அந்த ஆஸி பவுலரிடம் விராட் கோலி தடுமாறுவதை சரி செய்ய டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நடராஜன் தேவை – முன்னாள் பாக் வீரர்

இப்படி அக்சர் பட்டேலை அணியில் இணைப்பதற்கு காரணம் யாதெனில் விசாகப்பட்டினம் மைதானம் சுழலுக்கு கை கொடுக்கும் என்பதனாலும் நேற்று அங்கு மழை பெய்துள்ளதால் நிச்சயம் இன்று இந்த இரண்டாவது போட்டியில் மைதானம் சுழற்ப்பந்து வீச்சுக்கு அதிகமாக கைகொடுக்கும் என்பதனால் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் ரோகித் சர்மா இந்த போட்டியில் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement