அந்த ஆஸி பவுலரிடம் விராட் கோலி தடுமாறுவதை சரி செய்ய டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நடராஜன் தேவை – முன்னாள் பாக் வீரர்

Nattu
- Advertisement -

2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டி வரும் ஜூன் 7 முதல் 11 வரை இங்கிலாந்தின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் கோலாகலமாக நடைபெறுகிறது. வரலாற்றின் 2வது டெஸ்ட் சாம்பியனை தீர்மானிக்கும் இந்த போட்டியில் லீக் சுற்றில் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகள் கோப்பையை வெல்வதற்காக மோத உள்ளன. குறிப்பாக கடந்த ஃபைனலில் விராட் கோலி தலைமையில் நியூசிலாந்திடம் தவற விட்ட கோப்பையை இம்முறை ரோகித் சர்மா தலைமையில் எப்படியாவது வெல்லும் முயற்சியுடன் இந்தியா களமிறங்க உள்ளது.

wtc ind

- Advertisement -

பொதுவாக இங்கிலாந்து சூழ்நிலைகளில் ஸ்விங் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்ற நிலைமையில் அதற்கு ஈடு கொடுத்து பேட்டிங்கில் 350 – 400 போன்ற பெரிய ரன்கள் எடுப்பது வெற்றிக்கு மிகவும் அவசியம் என்று முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதற்கு இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி பெரிய ரன்களை குவிப்பது இந்தியாவின் வெற்றியை பிரகாசமாகும் என்றே சொல்லலாம்.

நடராஜன் தேவை:
ஆனால் 2014 சுற்றுப்பயணத்தில் கேரியரில் மறக்க முடியாத அளவுக்கு மோசமாக செயல்பட்ட அவர் 2018 சுற்றுப்பயணத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன் உட்பட அனைத்து இங்கிலாந்து பவுலர்களுக்கும் தக்க பதிலடி கொடுத்து தன்னைச் சாம்பியன் வீரர் என்பதை நிரூபித்தார். இருப்பினும் 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்து வந்த அவர் 2021 இங்கிலாந்து சுற்றுப்பயணம் மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் மீண்டும் சுமாராகவே செயல்பட்டார். குறிப்பாக அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசும் பந்துகளில் எட்ஜ் கொடுத்து அவுட்டாவதை வழக்கமாக வைத்துள்ள அவர் இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அதிகம் தடுமாறி வருகிறார்.

Nattu-2

மேலும் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் மும்பையில் நடைபெற்ற முதல் போட்டியில் மிட்சேல் ஸ்டார்க்கிடம் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டான விராட் கோலி இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிகமாக தடுமாறுவதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார். எனவே அதை சமாளித்து ஃபைனலில் வெற்றிகரமாக செயல்படுவதற்கு நடராஜன் போன்ற இடது கை வேகப்பந்து வீச்சாளர்களை நெட் பவுலர்களாக இந்திய அணி நிர்வாகம் கொண்டு வர வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“பந்து திரும்பி வரும் போது விராட் கோலி இடது கை பந்து வீச்சாளர்களுக்கு எதிராக கச்சிதமாக விளையாட தடுமாறுகிறார். எனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்பாக அவர் மிட்சேல் ஸ்டார்க் போன்ற தரமான பவுலர்களை எதிர்கொள்ள தேவையான பயிற்சிகளை எடுக்க வேண்டும். அதற்கு இந்திய அணி நிர்வாகம் நடராஜன் போன்ற பவுலர்களை நெட் பந்து வீச்சாளர்களாக கொண்டு வர வேண்டும்” என்று கூறினார்.

virat kohli Danish Kaneria

அவர் கூறுவது போல 2021 பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்கு நெட் பவுலராக தேர்வு செய்யப்பட்ட தமிழகத்தின் நடராஜன் ஆரம்ப கட்ட போட்டிகளில் பும்ரா, ஷமி உள்ளிட்ட முதன்மை பவுலர்கள் காயமடைந்து வெளியேறிய போது இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு பெற்றார். அந்த அனைத்து வாய்ப்புகளிலும் சிறப்பாக செயல்பட்டு மறக்க முடியாத காபா வெற்றியில் பெறுவதற்கு முக்கிய பங்காற்றிய அவர் இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தார். ஆனால் அதன் பின் காயமடைந்து வெளியேறிய அவர் மீண்டும் அடுத்த வாய்ப்பு பெறாமல் இருந்து வருவது தமிழக ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.

- Advertisement -

எனவே குறைந்தபட்சம் நெட் பவுலராக தேர்வானால் மீண்டும் இந்திய அணியில் அவர் விளையாடுவதற்கு வாய்ப்பு ஏற்படலாம். அத்துடன் தடுமாறி வரும் ராகுல் மும்பையில் நடைபெற்ற முதல் போட்டியில் வெற்றி பெற வைத்தது பற்றி டேனிஷ் கனேரியா மேலும் பேசியது பின்வருமாறு.

Danish Kaneria KL Rahul

இதையும் படிங்க:IND vs AUS : ரோஹித்தின் வருகையால் வாய்ப்பை இழக்கப்போவது யார்? – 2 ஆவது போட்டிக்கான பிளேயிங் லெவன் இதோ

“கேஎல் ராகுல் தனது பெரிய பின்னடைவை சமாளித்து வருகிறார். டெஸ்ட் அணியில் ஏற்கனவே நீக்கப்பட்டுள்ள அவர் இந்த ஒருநாள் தொடர் வாய்ப்பில் சிறந்து செயல்பட வேண்டியுள்ளது. அவரைப் போன்றவரை நீக்குவது தீர்வாகாது. அவர் சந்திக்கும் பிரச்சனைக்கான தீர்வுகளை காண வேண்டும். முதல் போட்டியில் அவர் மிகவும் நிதானமாக விளையாடி வெற்றி பெற வைத்தார்” என்று கூறினார்.

Advertisement