IND vs AUS : ரோஹித்தின் வருகையால் வாய்ப்பை இழக்கப்போவது யார்? – 2 ஆவது போட்டிக்கான பிளேயிங் லெவன் இதோ

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே கடந்த மார்ச் 17-ஆம் தேதி மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

IND vs AUS KL Rahul Jadeja

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது இன்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் முதல் போட்டியின் போது விடுப்பு எடுத்துக் கொண்ட கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்புகிறார்.

இதன் காரணமாக இந்த இரண்டாவது போட்டியில் ரோகித் சர்மாவிற்கு வழிவிடும் விதமாக துவக்க வீரரான இஷான் கிஷன் அணியில் இருந்து வெளியேற்றப்படுவார் என்று தெரிகிறது. மேலும் இந்த இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம் பிடிப்பார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிக அளவில் உள்ளது.

Rohith

இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா இணைவதை தவிர்த்து வேறுயெந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது. அந்த வகையில் இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

- Advertisement -

1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) விராட் கோலி, 4) சூரியகுமார் யாதவ், 5) கே.எல் ராகுல், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ரவீந்திர ஜடேஜா, 8) ஷர்துல் தாகூர், 9) முகமது ஷமி, 10) முகமது சிராஜ், 11) குல்தீப் யாதவ்.

இதையும் படிங்க : எனக்கும் தோனிக்கும் பிரச்சனையா? மில்லியன் டாலர் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்த – ஹர்பஜன் சிங்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் நடைபெற இருக்கும் விசாகப்பட்டினத்தில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை அறிக்கை கூறுவதினால் இந்த இரண்டாவது போட்டி மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement