எனக்கும் தோனிக்கும் பிரச்சனையா? மில்லியன் டாலர் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்த – ஹர்பஜன் சிங்

Harbhajan
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மஹேந்திர சிங் தோனியின் தலைமையில் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது. அந்த வெற்றிக்கு பிறகு இந்திய அணியில் இருந்த சீனியர் வீரர்களை ஒவ்வொருவராக தோனி அணியில் இருந்து கழற்றி விட்டதால் தோனியின் மீது இருந்த அதிர்ப்தி காரணமாக சில முன்னாள் வீரர்கள் வெளிப்படையாகவே தோனி குறித்து விமர்சித்து இருந்தனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங்கும் கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த பிறகு பேசுகையில் : தோனி குறித்த சில கருத்துக்களை தெரிவித்ததால் அவர்கள் இருவருக்கும் இடையே மனக்கசப்பு இருந்ததாக அப்போது தகவல்கள் வெளியாகின.

harbhajan 1

- Advertisement -

மேலும் ஹர்பஜன் பேசுகையில் : 31 வயதிலேயே நான் 400 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தேன். ஒரே ராத்திரியில் இத்தனை விக்கெட்டுகளை அள்ளி விட முடியாது. ஆனாலும் இந்திய அணிக்காக பல போட்டிகளில் வென்று கொடுத்திருந்த நான் எந்த ஒரு விளக்கமும் இன்றி அணியிலிருந்து தூக்கி வீசப்பட்டேன். பிசிசிஐ-யும் சரி தேர்வாளர்களும் சரி எனக்கு என்னுடைய நீக்கம் குறித்த எந்த பதிலையும் அளிக்கவில்லை.

அதேபோன்று அப்போது அணியின் கேப்டனாக இருந்த தோனி கூட என்ன நடந்தது என்பதை எனக்கு தெரிவிக்கவில்லை என்று தனது ஆதங்கத்தை தெரிவித்து இருந்தார். இப்படி தோனி குறித்து ஹர்பஜன் சிங் சில விமர்சனங்களை வெளிப்படையாக தெரிவித்திருந்ததால் அவர்களுக்கு இடையேயான உறவில் விரிசல் விழுந்ததாக கிரிக்கெட் வட்டாரத்தில் அரசல் புரசலாக பேசப்பட்டது.

Harbhajan

ஆனால் அதன் பிறகு தோனி மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இணைந்து விளையாடி இருந்ததால் அந்த பேச்சு சற்று அடங்கியிருந்தது. இந்நிலையில் தோனி மற்றும் ஹர்பஜன்சிங் ஆகியோருக்கு இடையேயான பிரச்சனை குறித்து நீண்ட நாட்களாக பேசாமல் இருந்த ஹர்பஜன் சிங் தற்போது மவுனத்தை கலைத்து ஒரு பதிலை அளித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய ஹர்பஜன் சிங் கூறுகையில் : தோனிக்கும் எனக்கும் எந்த ஒரு மனக்கசப்பும் இல்லை .உண்மையில் நாங்கள் பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்து வருகிறோம். பிசிசிஐ மற்றும் தேர்வு குழுவினர் மீதுதான் நான் குற்றம் சாட்டியிருந்தேன். நாங்கள் இருவரும் இந்திய அணிக்காக நிறைய போட்டிகளில் ஒன்றாக விளையாடியிருக்கிறோம்.

இதையும் படிங்க : சச்சின், சேவாக், யுவி மாதிரி அவர் 2023 உ.கோ வெல்ல துருப்பு சீட்டா இருப்பாரு – இளம் இந்திய வீரருக்கு ரெய்னா ஆதரவு

அதுமட்டுமின்றி பல வருடங்களாக நல்ல நண்பர்களாக இருந்தோம், இப்போதும் இருக்கிறோம். அவர் அவருடைய கரியரில் பிஸியாகி விட்டார். நான் என்னுடைய கரியரில் பிஸியாகி விட்டேன் அவ்வளவுதான். இப்போது கூட நாங்கள் அடிக்கடி சந்தித்து பேசி வருகிறோம். எங்களுக்குள் எந்த ஒரு பிளவும் இல்லை என ஹர்பஜன் சிங் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement