சச்சின், சேவாக், யுவி மாதிரி அவர் 2023 உ.கோ வெல்ல துருப்பு சீட்டா இருப்பாரு – இளம் இந்திய வீரருக்கு ரெய்னா ஆதரவு

Raina
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணிகளில் ஒன்றாக திகழும் இந்தியா தற்சமயத்தில் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியாக ஜொலித்து வருகிறது. இருப்பினும் கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டு எம்எஸ் தோனி தலைமையில் சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருந்த இந்தியா அதன் பின் கடந்த 9 வருடங்களாக பெரும்பாலான உலகக் கோப்பைகளில் நாக் அவுட் சுற்று வரை சென்று சொதப்பலாக செயல்பட்டு வெறுங்கையுடன் வெளியேறுவதை வழக்கமாக வைத்துள்ளது. குறிப்பாக விராட் கோலி தலைமையில் சந்தித்த வந்த தோல்விகள் ரோகித் சர்மா தலைமையில் மாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் கொஞ்சம் கூட மாறாமல் மீண்டும் இந்தியா அதே தோல்விகளை சந்தித்தது.

worldcup

- Advertisement -

அதனால் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ள இந்திய அணியினர் இந்த வருடம் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலக கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் செயல்பட்டு வருகிறார்கள். குறிப்பாக எப்போதுமே சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற டாப் அணிகளை கூட தெறிக்க விட்டு வலுவான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் இந்தியா 2011க்குப்பின் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் உலகக் கோப்பையை சொந்த ரசிகர்களின் ஆதரவுடன் வென்று சரித்திரம் படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ரெய்னா ஆதரவு:
பொதுவாக 2011இல் யுவராஜ் சிங் உட்பட உலகக் கோப்பை வெல்வதற்கு தரமான ஆல் ரவுண்டர்களும் பகுதி நேர பவுலர்களும் மிகவும் அவசியமாகிறார்கள். குறிப்பாக முதன்மை பவுலர்களே திணறும் போது பேட்ஸ்மேன்கள் பகுதிநேர பவுலர்களாக மாறி எதிரணியின் பார்ட்னர்ஷிப்பை உடைத்து வெற்றியை தலைகீழாக மாற்றும் திறமை கொண்டவர்கள். ஆனால் ஒரு காலத்தில் சச்சின், சேவாக் போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பகுதி நேர பவுலர்களாக செயல்பட்டது போல தற்போதைய இந்திய அணியில் யாரும் இல்லாததே உலக கோப்பை போன்ற தொடர்களில் தோல்விக்கு காரணமாக அமைந்து வருவதாக அனில் கும்ப்ளே போன்ற சில முன்னாள் வீரர்கள் சமீபத்தில் விமர்சித்திருந்தனர்.

Deepak-Hooda-and-Pandya

அதனால் வாஷிங்டன் சுந்தர் போன்ற இளம் வீரர்களை இந்திய அணி நிர்வாகம் வளர்த்து வரும் நிலையில் அந்த இடத்தில் தீபக் ஹூடா துருப்புச் சீட்டு வீரராக செயல்படும் திறமையைக் கொண்டுள்ளதாக 2011 உலகக் கோப்பையை வெல்ல கருப்பு குதிரையாக செயல்பட்ட சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அப்போதெல்லாம் சேவாக், சச்சின், யுவராஜ் போன்றவர்கள் பந்து வீசுவார்கள். நானும் யூசுப் பதானும் அதை செய்வோம். குறிப்பாக களத்தில் இடது கை பேட்ஸ்மேன் இருக்கும் போது தோனி எங்களை பந்து வீச அழைப்பார்”

- Advertisement -

“எனவே தீபக் ஹூடா அந்த துருப்புச்சீட்டான அம்சத்தை கொண்டு வந்து டாப் மற்றும் மிடில் ஆர்டரை இணைக்கும் பேட்ஸ்மேனாகவும் செயல்படுவார் என்று நினைக்கிறேன். மிகச் சிறந்த ஃபீல்டரான அவர் நல்ல ஆஃப் ஸ்பின்னர் என்ற நிலையில் தன்னுடைய டி20 ஃபார்மை ஒரு நாள் போட்டிகளிலும் பிரதிபலிக்கும் திறமையை கொண்டவர். சற்று குளிரான நேரத்தில் துவங்கவிருக்கும் இந்த உலகக் கோப்பையில் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களில் அசத்துவதற்கு நம்மிடம் அக்சர் படேல் – ரவீந்திர ஜடேஜா உள்ளனர். பனியின் தாக்கமும் இருக்கலாம்”

Raina

“எனவே அக்சர், ஜடேஜா, ஹூடா ஆகியோர் மிகவும் முக்கியமானவர்கள். அதனால் ஹர்திக் பாண்டியா தன்னுடைய வேகம் மற்றும் வித்தியாசத்தால் தாகத்தை ஏற்படுத்துவார். நாம் சேவாக் மற்றும் யுவராஜ் ஆகியோர் பந்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதை பார்த்துள்ளோம். குறிப்பாக பந்து வீச்சில் அசத்தும் தன்னம்பிக்கை கொண்ட யுவராஜ் சிங் தன்னுடைய பேட்டிங்கால் துருப்புச் சீட்டாக செயல்பட்டார். எனவே அவரைப் போன்ற வீரர் இருக்கும் போது அவரிடம் கேப்டன் 4 – 5 ஓவர்கள் எளிதாக கொடுக்கலாம். இது நல்ல சமநிலையை ஏற்படுத்தும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:என்ன பண்ணுவீங்களோ தெரியாது, டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் அவர் விளையாடனும் – ரோஹித்துக்கு சாஸ்திரி கோரிக்கை

கடந்த 2022ஆம் ஆண்டு அறிமுகமான தீபக் ஹூடா இதுவரை 10 ஒருநாள் போட்டிகளில் 153 ரன்களும் 3 விக்கெட்டுகளும் எடுத்து சமீப காலங்களில் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாகவே செயல்பட்டுள்ளார். இருப்பினும் யுவராஜ் சிங் போல வருங்காலங்களில் கிடைக்கும் வாய்ப்புகளில் அசத்துவாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement