என்ன பண்ணுவீங்களோ தெரியாது, டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் அவர் விளையாடனும் – ரோஹித்துக்கு சாஸ்திரி கோரிக்கை

Shastri
- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டின் 2வது சாம்பியனை தீர்மானிக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலக கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டி வரும் ஜூன் 7 – 11 வரை லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காக நடைபெற்று முடிந்துள்ள லீக் சுற்றில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகள் மாபெரும் இறுதி போட்டியில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன. அதில் கடந்த ஃபைனலில் நியூசிலாந்திடம் தோற்ற இந்தியா இம்முறை எப்படியாவது சாம்பியன் பட்டத்தை வென்று 2013க்குப்பின் ஒரு ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் கதைக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போராட உள்ளது.

Bharat

- Advertisement -

அந்த நிலையில் ஸ்விங் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இங்கிலாந்து மண்ணில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் காயத்தால் பங்கேற்க மாட்டார்கள் என்பது இந்தியாவுக்கு ஏற்கனவே பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் ரிஷப் பண்ட் இடத்தில் நடைபெற்று முடிந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் வாய்ப்பு பெற்ற கேஎஸ் பரத் இந்திய மைதானங்களில் சுமாராக விக்கெட் கீப்பிங் செய்து ஒரு அரை சதம் கூட அடிக்காததால் அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விக்கெட் கீப்பராக விளையாட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

சாஸ்திரி கோரிக்கை:
ஏனெனில் இந்திய சூழ்நிலைகளிலேயே கேஎஸ் பரத் தடுமாறும் நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருது வென்ற கேஎல் ராகுல் கடந்த 2018 சுற்றுப்பயணத்தில் இப்போது ஃபைனல் நடைபெறப் போகும் இதே ஓவல் மைதானத்தில் சதமடித்து 149 ரன்கள் குவித்தார். மேலும் இங்கிலாந்தில் பெரும்பாலும் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமில்லாத மைதானங்கள் இருக்கும் என்பதால் விக்கெட் கீப்பிங் செய்வதற்கு அதிக வேலை இருக்காது என்று தெரிவித்த தினேஷ் கார்த்திக், சுனில் கவாஸ்கர் ஆகியோர் ஃபைனலில் ராகுல் விளையாடுவது இந்தியாவின் பேட்டிங்கை வலுப்படுத்தும் என்று கூறினர்.

Rahul-1

அந்த நிலையில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் விக்கெட் கீப்பராக அசத்தலாக செயல்பட்டு 75* ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்த கேஎல் ராகுல் சமீப காலங்களாகவே ஓப்பனிங் இடத்தை விட மிடில் ஆர்டரில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். அதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் 5 அல்லது 6வது இடத்தில் அவரை விளையாட வையுங்கள் என்று கேப்டன் ரோஹித் சர்மா – ராகுல் டிராவிட் ஆகியோரை கேட்டுக் கொள்ளும் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் வாய்ப்பு கொடுப்பதற்கு தேர்வு குழுவினரிடம் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கான வேலையை கேஎல் ராகுல் சிறப்பாக செய்துள்ளார். இந்த ஒருநாள் தொடரின் 2வது போட்டியில் ரோஹித் சர்மா திரும்பும் நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலை முன்னிட்டு கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக விளையாடினால் இந்தியாவின் பேட்டிங் மிகவும் வலுவடையும். குறிப்பாக இங்கிலாந்து கால சூழ்நிலைகளில் ராகுல் மிடில் ஆர்டரில் 5 அல்லது 6வது இடத்தில் விளையாட முடியும். மேலும் அங்கு விக்கெட் கீப்பிங் சற்று தூரத்தில் செய்ய வேண்டும்”

“அங்கு நடைபெறும் போட்டிகளில் நீங்கள் ஸ்பின்னர்களுக்கு எதிராக நீங்கள் அதிகம் விக்கெட் கீப்பிங் செய்ய வேண்டிய நிலைமை வராது. எனவே ஐபிஎல் தொடருக்கு முன்பாக இத்தொடரிலேயே இன்னும் 2 போட்டிகளில் அவர் விளையாட உள்ளார். இதில் மிகச் சிறப்பாக செயல்பட்டு அவர் இந்திய அணியில் தன்னுடைய இடத்தை உறுதிப்படுத்துவார் என்று நம்புகிறேன்” என கூறினார்.

இதையும் படிங்க:வீடியோ : கண்டிப்பா சிஎஸ்கே மட்டும் ஜெயிக்க மாட்டாங்க, ஐபிஎல் 2023 கோப்பை அவங்க தான் ஜெய்ப்பாங்க – ஸ்ரீசாந்த் அதிரடி

மொத்தத்தில் நிறைய முன்னாள் வீரர்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய ஒருநாள் தொடரில் இதே போல விக்கெட் கீப்பராக அசத்தும் பட்சத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ராகுல் விளையாடுவதை பார்ப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement