வீடியோ : கண்டிப்பா சிஎஸ்கே மட்டும் ஜெயிக்க மாட்டாங்க, ஐபிஎல் 2023 கோப்பை அவங்க தான் ஜெய்ப்பாங்க – ஸ்ரீசாந்த் அதிரடி

Advertisement

உலகப் புகழ்பெற்ற ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் மார்ச் 31 முதல் அகமதாபாத் நகரில் கோலாகலமாக துவங்குகிறது. ஃபைனல் உட்பட மொத்தம் 74 போட்டிகள் நடைபெறும் இத்தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்வதற்கு களமிறங்கும் 10 கிரிக்கெட் அணிகளில் தோற்றுவிக்கப்பட்ட முதல் வருடத்திலேயே ஹர்திக் பாண்டியா தலைமையில் அபாரமாக செயல்பட்டு கோப்பையை வென்ற குஜராத் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்புடன் களமிறங்குகிறது. அதற்கு போட்டியாக வெற்றிகரமான ஐபிஎல் அணிகளாக திகழும் மும்பை மற்றும் சென்னை எப்படியாவது இம்முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் களமிறங்க உள்ளன.

GTvsRR

ஏனெனில் கடந்த வருடம் ஆரம்பத்திலேயே தொடர் தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி 2 இடங்களை பிடித்த அவ்விரு அணிகளும் இம்முறை சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்று கம்பேக் கொடுக்கப் போராட உள்ளன. அதே போல கடந்த வருடம் பிளே சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் போன கொல்கத்தா, ஹைதெராபாத் அணிகள் இம்முறை சிறப்பாக செயல்பட்டு நீண்ட நாட்களாக தொட முடியாமல் இருந்து வரும் கோப்பையை முத்தமிடும் எண்ணத்துடன் களமிறங்க உள்ளன.

- Advertisement -

ஸ்ரீசாந்த் அதிரடி:
மறுபுறம் கடந்த வருடம் சஞ்சு சாம்சன் தலைமையில் ஃபைனல் வரை சென்று போராடித் தோற்ற ராஜஸ்தான் இம்முறை அதே வேகத்துடன் 2வது கோப்பையை வென்று ஷேன் வார்னேவுக்கு புகழ் சேர்க்கும் எண்ணத்துடன் களமிறங்க உள்ளது. அந்த அணிகளுக்கு மத்தியில் ரிசப் பண்ட் இல்லாமல் டெல்லியும் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட டு பிளேஸிஸ் தலைமையில் பெங்களூருவும் ராகுல் தலைமையில் புதுப்பொலிவுடன் உருவாகியுள்ள லக்னோ அணியும் தங்களது முதல் கோப்பையை வெல்லும் கனவுடன் இத்தொடரில் களமிறங்குகின்றன.

Dhoni-3

அப்படி பலமுனை போட்டிக்கொண்ட இத்தொடருக்கு இன்னும் ஒரு சில வாரங்களே இருக்கும் நிலையில் கோப்பை வெல்லப்போவது யார் என்று எதிர்பார்ப்பும் கணிப்புகளும் வழக்கம் போல துவங்கியுள்ளன. குறிப்பாக 4 கோப்பைகளை வென்று 2வது வெற்றிகரமான கேப்டனாக ஜொலிக்கும் எம்எஸ் தோனி ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் விடை பெற்று விட்ட நிலையில் கடைசி முறையாக இந்த ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளார்.

- Advertisement -

எனவே அவரது தலைமையில் 5வது கோப்பையை வென்று தோனி வெற்றியுடன் தனது ஐபிஎல் கேரியரை நிறைவு செய்வாரா என்று எதிர்பார்ப்பு சென்னை ரசிகர்களிடம் காணப்படுகிறது. இந்நிலையில் 2023 ஐபிஎல் தொடரை நிச்சயமாக சென்னை சூப்பர் கிங்ஸ் வெல்லாது என்று கணிக்கும் முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீ சாந்த் தங்களது மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் தலைமை தாங்கும் ராஜஸ்தான் அணிக்கு ஆதரவு கொடுத்தாலும் கோப்பையை வெல்லப்போவது பெங்களூரு அணியாகத்தான் இருக்கும் என்று அதிரடியான கணிப்பை வெளியிட்டுள்ளார்.

RCB Faf Du Plessis

குறிப்பாக ஏற்கனவே சாம்பியன் பட்டம் வென்ற அணி மீண்டும் கோப்பையை வென்று என்ன பயன் என தெரிவிக்கும் அவர் காலம் காலமாக முதல் கோப்பையை முத்தமிட போராடி வரும் பெங்களூரு இம்முறை தங்களது லட்சியத்தை எட்டினால் அது தமக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாக அமையும் என்று தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நிச்சயமாக சிஎஸ்கே 2023 ஐபிஎல் கோப்பையை வெல்லும் என்று எனக்கு தோன்றவில்லை. இந்த தொடரில் கேரளாவை சேர்ந்த ஒருவர் மட்டுமே கேப்டனாக செயல்படுகிறார். எனவே சஞ்சு சாம்சன் தலைமை தாங்கும் ராஜஸ்தான் அணிக்கு நான் ஆதரவு கொடுப்பேன். ஆனால் இந்த சீசனில் ஒரு புதிய அணி கோப்பையை வெல்வதை பார்ப்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும்”

இதையும் படிங்க:உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்லப்போவது இந்த அணிதான் – பால் காலிங்வுட் கருத்து

“குறிப்பாக 2023 ஐபிஎல் கோப்பையை பெங்களூரு வென்றால் அது மிகச் சிறப்பாக இருக்கும். ஏனெனில் விராட் கோலி இந்திய கிரிக்கெட்டுகாக நிறைய பங்காற்றியுள்ளார். எனவே இம்முறை ஆர்சிபி வென்றால் அது மிகச் சிறந்ததாக அமையும்” என்று கூறினார்.

Advertisement