உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்லப்போவது இந்த அணிதான் – பால் காலிங்வுட் கருத்து

IND vs AUS
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரினை இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரில் பெற்ற வெற்றியின் மூலம் இந்திய அணியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இரண்டாவது அணியாக தகுதி பெற்றது. ஏற்கனவே இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலிய அணி வென்றதால் அவர்கள் முதல் அணியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தனர்.

IND vs AUS

- Advertisement -

இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி வரும் ஜூன் மாதம் 7-ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.

கடந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறி நியூசிலாந்து அணிக்கு எதிராக தோல்வியை தழுவி சாம்பியன் பட்டத்தை தவறவிட்ட இந்திய அணியானது இம்முறை சாம்பியன்ஷிப் தொடரை கைப்பற்ற முனைப்பு காட்டும். அதேபோன்று முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷித் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள ஆஸ்திரேலியா அணியும் முதல் முயற்சியிலேயே கோப்பையை வெல்ல முயற்சிக்கும்.

Paul-Collingwood

எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த கடைசி போட்டி தற்போதே அனைவரது மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்த இறுதிப் போட்டியில் வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த கருத்தினை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பால் காலிங்வுட் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த பார்டர் கவாஸ்கர் தொடரிலும் அவர்களது ஆட்டம் அற்புதமாக இருந்தது.

இதையும் படிங்க : கே.எல் ராகுலுக்கு இதுதான் சரியான பேட்டிங் பொசிஷன். அவரு அங்கேயே ஆடட்டும் – புள்ளிவிவரம் இதோ

எனவே இந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை வெல்ல இந்திய அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது. அந்த அளவிற்கு இந்திய அணியின் செயல்பாடு அற்புதமாக உள்ளது என பால் காலிங்வுட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement