கே.எல் ராகுலுக்கு இதுதான் சரியான பேட்டிங் பொசிஷன். அவரு அங்கேயே ஆடட்டும் – புள்ளிவிவரம் இதோ

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை சிறப்பாக எதிர்கொண்டு 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது 188 ரன்களை மட்டுமே குவித்தது.

IND vs AUS KL Rahul Jadeja

- Advertisement -

அதனை தொடர்ந்து 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியானது துவக்கத்திலேயே விராட் கோலி, சுப்மன் கில், சூரியகுமார் யாதவ், இஷான் கிஷன் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதன் காரணமாக 39 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

அப்போது இந்திய அணி எப்படி வெற்றிக்கு செல்ல போகிறது என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல் ராகுல் 91 பந்துகளில் ஏழு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 75 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்து இந்திய அணியையும் வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

KL Rahul

நடைபெற்று முடிந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் மோசமான செயல்பாடு காரணமாக ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் விமர்சனத்தை சந்தித்த கே.எல் ராகுல் ஒருநாள் போட்டியில் தற்போது சிறப்பாக விளையாடியுள்ளது அவர் மீது சற்று நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி கே.எல் ராகுல் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து ஐந்தாவது பேட்ஸ்மேனாக களமிறங்கி அற்புதமான புள்ளி விவரங்களை வைத்துள்ளார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

- Advertisement -

எனவே கே.எல் ராகுலை ஐந்தாவது இடத்திலேயே பின் வரிசையில் களம் இறக்கலாம் என்றும் பலரும் கூறி வருகின்றனர். ஏனெனில் கடைசியாக ராகுல் ஐந்தாம் இடத்தில் களமிறங்கி விளையாடிய 7 போட்டிகளில் 56 ரன்கள் சராசரியுடன் 282-ரன்களை குவித்துள்ளார். இதில் மூன்று அரை சதங்கள் அடங்கும். அதோடு அதிகபட்சமாக 75 ரன்கள் குவித்துள்ளார்.

இதையும் படிங்க : சலிச்சு போன ஒன்டே கிரிக்கெட்டில் ஆர்வத்தை ஏற்படுத்த அதை செய்ங்க, சச்சின் டெண்டுல்கர் புதிய அட்டகாசமான ஆலோசனை

இப்படி இவர் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் இந்திய அணியை இறுதி நேரத்தில் அற்புதமான வெற்றிக்கு இவர் அழைத்து சென்றுள்ளதால் இனி வரும் போட்டிகளிலும் இவர் ஐந்தாவது இடத்திலேயே களமிறங்க வேண்டும் என்று என்பதே புள்ளி விவரங்கள் கூறும் விவரமாக இருப்பது மட்டுமின்றி கிரிக்கெட் நிபுணர்களின் கருத்தாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement