சலிச்சு போன ஒன்டே கிரிக்கெட்டில் ஆர்வத்தை ஏற்படுத்த அதை செய்ங்க, சச்சின் டெண்டுல்கர் புதிய அட்டகாசமான ஆலோசனை

Sachin
- Advertisement -

நூற்றாண்டுக்கு முன்பு துவங்கப்பட்ட டெஸ்ட் போட்டிகள் பெரும்பாலும் 5 நாட்கள் நடைபெற்றும் ட்ராவில் முடிந்ததால் ரசிகர்களை கவர்வதற்காக ஒரு நாளில் முடிவை காணும் வகையில் 60 ஓவர்களுடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஒருநாள் கிரிக்கெட்டை மையப்படுத்தி உலக சாம்பியனை தீர்மானிக்கும் உலக கோப்பையையும் ஐசிசி அறிமுகப்படுத்தியது. அதனால் 1970களில் மிகவும் பிரபலமான ஒருநாள் போட்டிகளை மேலும் சுவாரசியப்படுத்துவதற்காக 50 ஓவர்களாக குறைக்கப்பட்டு கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் டி20 போட்டிகளின் வருகையாலும் ஐபிஎல் போன்ற பிரீமியர் லீக் தொடர்களின் வருகையாலும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் பின்னடைவை சந்தித்துள்ளன.

worldcup

- Advertisement -

அதில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் எனும் பிரத்தியேக உலகக்கோப்பையை ஐசிசி அறிமுகப்படுத்தியுள்ளதால் டெஸ்ட் போட்டிகள் மீண்டும் உயிர்த்தெழுந்துள்ளன. ஆனால் ஒருநாள் போட்டிகள் மிகவும் அலுப்பு தட்டுவதாக இருப்பதால் நிறுத்தி விடலாம் என்று சிலர் தெரிவிக்கும் நிலையில் 40 ஓவர்களாக குறைக்கலாம் என்று ரவி சாஸ்திரி, சாகித் அப்ரிடி போன்ற சில முன்னாள் வீரர்கள் ஆலோசனை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ஒருநாள் போட்டிகளின் முடிவுகள் எளிதாக கணிக்கும் வகையில் இருப்பதால் அலுப்பு தட்டுவதாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

அட்டகாசமான ஆலோசனை:
போதாகுறைக்கு 2 பந்துகள் போன்ற பல விதிமுறைகள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருப்பதாக தெரிவிக்கும் அவர் அதில் மீண்டும் சுவாரசியத்தை ஏற்படுத்த டெஸ்ட் போட்டிகளை போல ஒருநாள் போட்டிகளையும் 2 பாகங்களாக 25 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக மாற்ற வேண்டுமென தனித்துவமான ஆலோசனை கொடுத்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் விரிவாக பேசியது பின்வருமாறு. “ஒருநாள் கிரிக்கெட் சந்தேகமின்றி ஒரு மாதிரியாக வருகிறது. இதில் 2 பகுதிகள் உள்ளன. ஒன்று தற்போதைய வடிவம் மற்றொன்று அது எப்படி விளையாட வேண்டும் என்று நான் நினைப்பதாகும். முதலில் இப்போதைய ஃபார்மட் பற்றி பேசும் போது நீங்கள் 2 புதிய பந்துகள் பயன்படுத்துகிறீர்கள்”

worldcup2011

“அது ரிவர்ஸ் ஸ்விங் ஆவதை முற்றிலுமாக நீக்குகிறது. போட்டி 40வது ஓவரில் இருந்தால் கூட அந்த பந்தைப் பொறுத்த வரை அது 20வது ஓவராகும். ஆனால் அது 30வது ஓவரின் போது திரும்புகிறது என்று நினைக்கிறேன். முன்பெல்லாம் பந்தின் நிறம் மற்றும் வழுவழுப்பு மாறி சேதமடைந்த நிலைமை கடினத்தை ஏற்படுத்தும். தற்போது 2 புதிய பந்துகள் பயன்படுத்தப்படுவதால் அந்த அம்சம் காணாமல் போய்விட்டது. சில ஸ்பின்னர்களிடம் நான் பேசிய போது 5 ஃபீல்டர்கள் உள்வட்டத்திற்குள் இருப்பதால் தங்களால் நினைக்கும் லைனை சுதந்திரமாக மாற்றி பந்து வீச முடியவில்லை என்று தெரிவித்தனர்”

- Advertisement -

“குறிப்பாக பேட்ஸ்மேன்கள் தவறு செய்வார்கள் என்ற நம்பிக்கையுடன் லைனை மாற்றி வீசினால் அதற்கு பெரிய தண்டனை கிடைப்பதாக தெரிவித்தனர். அதாவது உள்வட்டத்திற்குள் 5 ஃபீல்டர்கள் மற்றும் 2 புதிய பந்துகள் அடங்கிய இப்போதைய ஃபார்மட்டில் பவுலர்களுக்கு பாதுகாப்பில்லை என்று தெரிவித்தனர். இந்த நிலையில் 2வது பாகத்திற்கு வரும் போது முதலில் நாம் 25 ஓவர்கள் விளையாட வேண்டும். அதாவது 100 ஓவர்களை டெஸ்ட் கிரிக்கெட் போல 4 பகுதிகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் 20 விக்கெட்டுகள் என்ற நிலைமையில் ஒருநாள் போட்டிகளில் 10 விக்கெட் மட்டுமே இருக்கும் என்பதால் முதல் 25 ஓவரில் நீங்கள் ஆல் அவுட்டாகும் பட்சத்தில் அடுத்த 25 ஓவர்களில் உங்களால் மீண்டும் பேட்டிங் செய்ய முடியாது”

sachin

“இதை ஏன் நான் சொல்கிறேன் என்றால் ஒரு முறை இது போல இலங்கையில் நாங்கள் விளையாடிய போது 118 ஓவர்கள் விளையாடியும் எந்த முடிவும் கிடைக்கவில்லை. ஆனால் இந்த முறையில் நீங்கள் 25 ஓவர்களும் எதிரணி 25 ஓவர்களும் விளையாடியிருப்பீர்கள். அதாவது குறைந்தது இரு அணியும் தலா 1 முறை 25 ஓவர்கள் விளையாடியிருக்கும். மொத்தத்தில் இப்போதைய ஃபார்மட் மிகவும் கணிக்க கூடியதாக இருக்கிறது”

இதையும் படிங்க:INDvsAUS : ஆஸ்திரேலிய அணி பண்ண அந்த தப்பை இந்தியா பண்ணல. அதுவே வெற்றிக்கு காரணம் – விவரம் இதோ

“15 – 40வது ஓவர் வரை எந்த ஆர்வமும் ஏற்படுவதில்லை என்பதால் மிகவும் சலிப்பு தட்டுகிறது. மேலும் பனியன் தாக்கத்தை எப்படி கட்டுப்படுத்த முடியும்? கேப்டன் டாஸ் தோற்றால் வெற்றி பெறுவது கடினமாக இருக்கிறது. நாணயம் எந்த பக்கம் விடும் என்பதை உங்களால் கட்டுப்படுத்த முடியாது. எனவே இது போன்ற இடைவெளிகளை நீங்கள் குறைக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement