INDvsAUS : ஆஸ்திரேலிய அணி பண்ண அந்த தப்பை இந்தியா பண்ணல. அதுவே வெற்றிக்கு காரணம் – விவரம் இதோ

IND vs AUS KL Rahul Jadeja
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி நேற்று மார்ச் 17-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

IND vs AUS

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது 35.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்கள் மட்டுமே குவித்தது. ஆஸ்திரேலிய அணி சார்பாக மிட்சல் மார்ஷ் 81 ரன்கள் குவித்தார். இந்திய அணி சார்பாக முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் தலா மூன்று விக்கெட்டுகளையும், ஜடேஜா இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றி அசத்தினர்.

அதனை தொடர்ந்து 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 39.5 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

KL Rahul 1

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி செய்த ஒரு தவறை இந்திய அணி செய்யாததே வெற்றிக்கு காரணம் என்று கிரிக்கெட் நிபுணர்கள் சரியான புள்ளி விவரங்களுடன் கூறியுள்ளனர். அந்த வகையில் மும்பை மைதானத்தில் நிறைய ரன்கள் வரும் என்பதனால் துவக்கத்திலேயே அதிரடியாக விளையாடியது.

- Advertisement -

இதனால் ஆஸ்திரேலிய அணியானது ஒரு கட்டத்தில் 129 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது. ஆனாலும் ரன் குவிப்பின் வேகத்தை அதிகப்படுத்த வேண்டி அவர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் அடுத்த 59 ரன்களுக்குள் மீதமுள்ள எட்டு விக்கெட்டுகளையும் ஆஸ்திரேலிய அணியினர் இழந்தனர்.

இதையும் படிங்க : IND vs AUS : 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் வெல்லப்போவது யார்? ஆரோன் பின்ச் சொன்ன ரசிகர்கள் எதிர்பாராத பதில்

ஆனால் இந்திய அணி 83 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தாலும் அடுத்த ஆறாவது விக்கெட்டிற்கு சீராக விளையாடி சரியான பாட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்கு சென்றது. இப்படி மைதானத்தின் தன்மையை புரிந்து சரியான சீரான வேகத்தில் சென்றதால் இந்திய அணி விக்கெட்டை இழக்காமல் வெற்றி பெற்றது என்று நிபுணர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement