IND vs AUS : 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் வெல்லப்போவது யார்? ஆரோன் பின்ச் சொன்ன ரசிகர்கள் எதிர்பாராத பதில்

- Advertisement -

இங்கிலாந்தில் இருக்கும் புகழ்பெற்ற லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் வரும் ஜூன் 7 முதல் 11 வரை வரலாற்றின் 2வது டெஸ்ட் சாம்பியனை தீர்மானிக்கும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி நடைபெறுகிறது. அதற்காக கடந்த 2021 முதல் நடைபெற்று வந்த லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகள் இறுதிப் போட்டியில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன. அதில் கடந்த முறை நியூசிலாந்திடம் விராட் கோலி தலைமையில் ஃபைனலில் சொதப்பி கோப்பையை கோட்டை விட்ட இந்தியா இம்முறை எப்படியாவது ரோகித் சர்மா தலைமையில் சாம்பியன் பட்டத்தை முத்தமிட்டு 2013க்குப்பின் ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் கதைக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போராட உள்ளது.

IND vs AUS

- Advertisement -

இருப்பினும் பொதுவாகவே இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் தடுமாறக்கூடிய இந்தியாவை ரோகித் சர்மா இந்த போட்டியில் தான் ஆசிய கண்டத்திற்கு வெளியே முதல் முறையாக கேப்டனாக வழிநடத்த உள்ளார். அப்படி வெளிநாடுகளில் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத அவரது தலைமையிலான இந்திய அணியில் காயத்தால் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய 2 கருப்பு குதிரை வீரர்கள் விளையாடப் போவதில்லை என்பதும் ஆரம்பத்திலேயே மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

எதிர்பாராத பதில்:
மறுபுறம் நடைபெற்று முடிந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் தோற்றாலும் ஒய்ட் வாஷ் தோல்வியை தவிர்த்து தங்களது நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்த ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு அதன் சொந்த மண்ணிலேயே பெரிய சவாலை கொடுத்தது. அதை விட இந்தியாவில் இருக்கும் கால சூழ்நிலைக்கும் இங்கிலாந்து கால சூழ்நிலைக்கும் கொஞ்சம் கூட பொருந்தாது என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் ஆஸ்திரேலியாவில் இருக்கும் கால சூழ்நிலையும் இங்கிலாந்தில் இருக்கும் கால சூழ்நிலையும் கிட்டத்தட்ட ஒன்றாகும். அதே போல் இங்கிலாந்தில் வெற்றியை மாற்றக்கூடிய 4வது வேகப்பந்து வீச்சாளராக ஆஸ்திரேலியா அணியில் ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் விளையாட உள்ளார்.

Siraj

மறுபுறம் இந்திய அணியில் அதற்கு நிகராக ஹர்திக் பாண்டியா போன்றவர் இல்லாத நிலையில் ஷார்துல் தாக்கூரை வைத்து நிலையை சமாளிக்க வேண்டியுள்ளது. அதனால் இந்தியாவை விட பட் கமின்ஸ், மிட்சேல் ஸ்டார்க், ஹேசல்வுட் போன்ற அனுபவமிக்க வேகப்பந்து வீச்சு கூட்டணியை கொண்ட ஆஸ்திரேலியா இந்த ஃபைனலில் வெல்வதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கிறது. இந்நிலையில் என்ன தான் ஹார்டிக் பாண்டியா, பும்ரா போன்ற வீரர்கள் இல்லையென்றாலும் ஷமி, உமேஷ், சிராஜ் ஆகியோர் தற்சமயத்தில் தரமான வேகப்பந்து வீச்சாளர்களாக இருப்பதால் இந்த ஃபைனலில் இந்தியா வெல்லும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் இந்திய ரசிகர்கள் எதிர்பாராத பதிலை கொடுத்துள்ளார்.

- Advertisement -

அத்துடன் நடைபெற்று முடித்த பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் டெல்லியில் நடந்த 2வது போட்டியில் ஒரு மணி நேரத்தில் சொதப்பில் வெற்றியை ஆஸ்ரேலியா கைவிடாமல் போயிருந்தால் 2 – 1 (4) என்ற கணக்கில் வென்றிருக்கலாம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “ஹர்டிக் பாண்டியா டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவாரா என்பது எனக்கு தெரியாது. ஆனால் ஷமி, உமேஷ், சிராஜ் ஆகியோரை நீங்கள் பாருங்கள். அவர்கள் தற்சமயத்தில் இருக்கும் நல்ல வேகப்பந்து வீச்சாளர்கள். குறிப்பாக உலக அளவில் சிராஜ் தற்சமயத்தில் டாப் பவுலராக இருக்கிறார்”

“அவரால் பந்தை ஸ்விங் செய்ய முடியும். இந்தியா கடைசியாக இங்கிலாந்தை அவர்கள் சொந்த மண்ணில் தோற்கடித்தார்கள். எனவே இந்தியாவுக்கு ஃபைனலில் மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் 2 அல்லது 1 ஸ்பின்னருடன் விளையாடினாலும் வெற்றிக்கான அனைத்து அடிப்படைகளையும் பூர்த்தி செய்துள்ளார்கள். மறுபுறம் ஆஸ்திரேலியா நிச்சயமாக 3 ஸ்பின்னர்களை பயன்படுத்த போவதில்லை”

இதையும் படிங்க:NZ vs SL : ஒரே இன்னிங்ஸில் 2 இரட்டை சதங்கள், இலங்கையை துவம்சம் செய்து 5 வரலாற்று சாதனை படைத்த வில்லியம்சன்

“டெல்லியில் ஒரு மணி நேரம் பதற்றமடையாமல் இருந்திருந்தால் 2 – 1 (4) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை வென்றிருக்க வேண்டும். கவாஜா மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார். 3வது போட்டியில் டாஸ் தோற்றும் ஆஸ்திரேலியா வெற்றிக்கு தகுதியான அணியாக அசத்தியது. இருப்பினும் அவர்கள் அத்தொடரை 2 – 1 வென்றிருக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement