NZ vs SL : ஒரே இன்னிங்ஸில் 2 இரட்டை சதங்கள், இலங்கையை துவம்சம் செய்து 5 வரலாற்று சாதனை படைத்த வில்லியம்சன்

NZ vs SL Williamson
- Advertisement -

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. கிறிஸ்ட்சர்ச் நகரில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் அனல் பறந்த கடைசி நாளின் கடைசி பந்து வரை போராடிய நியூசிலாந்து வெறும் 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அதன் காரணமாக அகமதாபாத் நகரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் ட்ராவை சந்தித்த போதும் லண்டனில் நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு இந்தியா தகுதி பெற்றது இலங்கையின் வாய்ப்புகளை உடைத்தது.

அந்த நிலையில் குறைந்தபட்சம் ஒயிட்வாஷ் தோல்வியை தவிர்த்து ஆறுதல் வெற்றி பெறும் எண்ணத்துடன் மார்ச் 17ஆம் தேதியன்று வெலிங்டன் நகரில் துவங்கிய தொடரின் 2வது போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு 87 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த டாம் லாதம் 21 ரன்களில் அவுட்டானாலும் மற்றொரு தொடக்க வீரர் டேவோன் கான்வே அரை சதமடித்து 78 ரன்கள் குவித்து அவுட்டானார்.

- Advertisement -

அபார சாதனைகள்:
அந்த நிலையில் ஜோடி சேர்ந்த நம்பிக்கை நட்சத்திரம் கேன் வில்லியம்சன் மற்றும் ஹென்றி நிக்கோலஸ் ஆகியோர் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தி தங்களது அணிக்கு சீராக ரன்களை சேர்த்தனர். நேரம் செல்ல செல்ல நங்கூரமாக நின்று அரை சதம் கடந்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த இருவருமே முதல் நாளிலேயே இலங்கை பவுலர்கள் போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு சதமடித்தார்கள்.

அந்த நிலையில் 2வது நாளில் மேலும் செட்டிலாகி இலங்கையை துவம்சம் செய்ய துவங்கிய இந்த ஜோடியில் ஏற்கனவே முதல் போட்டியில் சதமடித்து நல்ல ஃபார்மில் இருக்கும் கேன் வில்லியம்சன் இப்போட்டியில் அதையும் மிஞ்சி இரட்டை சதமடித்து அசத்தினார். குறிப்பாக 3வது விக்கெட்டுக்கு 363 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து தனது அணியை வலுப்படுத்திய அவர் ஒரு வழியாக 23 பவுண்டரி 2 சிக்சருடன் 215 (296) ரன்கள் குவித்து அவுட்டானார். அடுத்து வந்த டார்ல் மிட்சேல் 17 ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் தனது பங்கிற்கு இலங்கையை துவம்சம் செய்த ஹென்றி நிக்கோலஸ் 15 பவுண்டரி 4 சிக்சருடன் இரட்டை சதமடித்து 200* (240) ரன்கள் விளாசினார்.

- Advertisement -

அப்போது 580/4 ரன்கள் எடுத்த நியூசிலாந்து தங்களது முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. பரிதாபமாக பந்து வீசிய இலங்கை சார்பில் அதிகபட்சமாக கௌசன் ரஜிதா 2 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கைக்கு பெர்னாண்டோ 6, குசால் மெண்டிஸ் 0 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 2வது நாள் முடிவில் 26/2 என தடுமாறி வருகிறது. இப்போட்டியில் தேன் வில்லியம்சன் நிகழ்த்திய சாதனைகளை பார்ப்போம்:

1. வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு டெஸ்ட் போட்டியின் ஒரே இன்னிங்ஸில் 2 நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் (வில்லியம்சன் 215, நிக்கோலஸ் 200*) இரட்டை சதமடிப்பது இதுவே முதல் முறையாகும்.

- Advertisement -

2. அத்துடன் கடந்த 2021ஆம் ஆண்டு கிறிஸ்ட்சர்ச் நகரில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டியிலும் இதே வில்லியம்சன் – நிக்கோலஸ் ஜோடி 369 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 முறை 300+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் நியூசிலாந்து ஜோடி என்ற வரலாற்றையும் அவர்கள் படைத்தனர்.

3. மேலும் இப்போட்டியில் 215 ரன்கள் குவித்த கேண் வில்லியம்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 8000 ரன்கள் குவித்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. கேன் வில்லியம்சன் : 8124*
2. ராஸ் டெய்லர் : 7683
3. ஸ்டீபன் பிளெமிங் : 7172

- Advertisement -

4. அது போக 28 டெஸ்ட், 13 ஒருநாள் என மொத்தமாக 41 சதங்கள் அடித்துள்ள அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த நியூசிலாந்து வீரர் என்ற வரலாற்றுச் சாதனையும் படைத்துள்ளார். இதற்கு முன் ராஸ் டெய்லர் 40 சதங்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க:IND vs AUS : பந்து ஸ்விங் ஆனா இவரை மாதிரி ஒரு டேஞ்சர் பவுலரே இருக்க மாட்டாங்க – கே.எல் ராகுல் வெளிப்படை

5. மேலும் மொத்தமாக 6 இரட்டை சதங்கள் அடித்துள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக இரட்டை சதங்கள் அடித்த 5வது வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர்,ரிக்கி பாண்டிங் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Advertisement