IND vs AUS : பந்து ஸ்விங் ஆனா இவரை மாதிரி ஒரு டேஞ்சர் பவுலரே இருக்க மாட்டாங்க – கே.எல் ராகுல் வெளிப்படை

KL Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது.

IND vs AUS

- Advertisement -

அதன்படி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்காத ஆஸ்திரேலிய அணியானது 35.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி இந்திய அணியானது துவக்கத்திலிருந்தே அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்தது. குறிப்பாக 39 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்ததால் வெற்றி இலக்கை எவ்வாறு எட்டப் போகிறது என்ற கேள்வி எழுந்தது.

இவ்வேளையில் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல் ராகுல் ஒருநாள் கிரிக்கெட்டில் ஐந்தாவது வீரராக களமிறங்கி இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்து 91 பந்துகளில் ஏழு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 75 ரன்கள் குவித்து அணியை அட்டகாசமான வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவரது இந்த பொறுப்பான ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் என்னதான் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஐந்தாவது வீரராக இவர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாக கிரிக்கெட் நிபுணர்களும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

KL Rahul

இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்து பேசிய கே.எல் ராகுல் கூறுகையில் : துவக்கத்திலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்ததால் சற்று பதட்டம் ஏற்பட்டது. அதேபோன்று ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஸ்டார்க் போட்டியின் ஆரம்பத்திலேயே பந்தினை ஸ்விங் செய்தார். பந்து ஸ்விங் ஆகும் போது அவரைவிட ஒரு மோசமான பந்துவீச்சாளர் இருக்கவே முடியாது. அந்த அளவிற்கு அவர் டேஞ்சரஸ் பவுலர். இருந்தாலும் நான் நேச்சுரலான கிரிக்கெட் ஷாட்டுகளை விளையாட முயற்சித்தேன்.

- Advertisement -

அதனால் சில பவுண்டரிகள் கிடைத்தது. என்னுடைய ஆட்டமும் நன்றாக செட் ஆனது. நான் ஆரம்பத்திலிருந்து சுப்மன் கில், ஹார்டிக், ஜடேஜா என அனைவரிடமும் மைதானத்தின் தன்மை இதுதான் என தெரிவித்து அதன்படி விளையாட கேட்டுக் கொண்டேன். அதன்படி அனைவரிடமே சின்ன சின்ன பாட்னர்ஷிப் அமைந்து இறுதியில் போட்டி வெற்றிகரமாக முடித்ததில் மகிழ்ச்சி. குறிப்பாக ஜடேஜா உடன் பேட்டிங் செய்யும்போது மிகவும் சிறப்பாக இருந்தது. அவர் ஒரு இடது கை ஆட்டக்காரராக எனக்கு ஒரு நல்ல கம்பெனி கொடுத்தார். அவரது வருகை நமக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளது.

இதையும் படிங்க : IND vs AUS : அச்சுறுத்த காத்திருக்கும் மழை – 2வது ஒன்டே நடைபெறும் விசாகப்பட்டினம் மைதானம் எப்படி? பிட்ச் – வெதர் ரிப்போர்ட் இதோ

ஜடேஜா மிகச்சிறப்பாக பேட்டிங் செய்கிறார். அதோடு ரன்னிங் ஓடும் போதும் மிகச் சிறப்பாக அவர் ஈடு கொடுக்கிறார். அவர் பார்மில் இருந்தால் எப்படிப்பட்ட வீரர் என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டார். இறுதிவரை போட்டியை நின்று வெற்றிகரமாக முடித்துக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதன்படி வெற்றிகரமாக போட்டி முடிவடைந்ததில் மகிழ்ச்சி என கே.எல் ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement