IND vs AUS : அச்சுறுத்த காத்திருக்கும் மழை – 2வது ஒன்டே நடைபெறும் விசாகப்பட்டினம் மைதானம் எப்படி? பிட்ச் – வெதர் ரிப்போர்ட் இதோ

Vizag Cricket Stadium
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் முதலில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கும் தகுதி பெற்ற இந்தியா அடுத்ததாக களமிறங்கியுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் போராடி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டியில் பந்து வீச்சில் மிரட்டலாக செயல்பட்டு ஆஸ்திரேலியாவை 188 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா விராட் கோலி உள்ளிட்ட டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியும் ராகுல் – ஜடேஜாவின் போராட்டத்தால் சிறப்பான வெற்றி பெற்றது.

மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பியதால் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா 2வது போட்டியில் அந்த தவறுகளை திருத்திக் கொண்டு எப்படியாவது வென்று தொடரை சமன் செய்து பதிலடி கொடுக்க போராட உள்ளது. இருப்பினும் 2வது போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா திரும்புவதால் ஏற்கனவே வென்ற புத்துணர்ச்சியுடன் இருக்கும் இந்தியா இப்போட்டியிலும் வென்று ஆரம்பத்திலேயே இத்தொடரின் கோப்பையை கைப்பற்ற முழுமூச்சுடன் விளையாட உள்ளது. அதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து இத்தொடரின் 2வது போட்டி மார்ச் 19ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.

- Advertisement -

அச்சுறுத்தும் மழை:
கடந்த 2005 முதல் ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வரும் இந்த மைதானத்தில் ஒருநாள் வரலாற்றில் இதுவரை 9 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் 5 போட்டிகளில் சேசிங் செய்த அணியும் 3 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும் வென்றுள்ளன. 1 போட்டி டையில் முடிந்துள்ளது. இந்த மைதானத்தில் 9 போட்டிகளிலும் விளையாடியுள்ள இந்தியா 6 வெற்றிகளையும் 1 தோல்வியும் 1 டையும் சந்தித்துள்ளது.

1. இந்த மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் மற்றும் அதிக சதங்கள் (3) அடித்த வீரராக விராட் கோலி (556) சாதனை படைத்து தனது கோட்டையாக வைத்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் ரோகித் சர்மா : 159 – வெஸ்ட் இண்டீஸ் அன்னைக்கு எதிராக, 2019.

- Advertisement -

3. இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை (9) எடுத்த வீரராக குல்தீப் யாதவ் உள்ளார். சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த பவுலர் : அமித் மிஸ்ரா – 5/18. அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி இந்தியா : 387/5 – வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக, 2019. குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி : நியூஸிலாந்து – 79 ஆல் அவுட், இந்தியாவுக்கு எதிராக, 2016.

வெதர் ரிப்போர்ட்:
இந்தியாவின் சமீபத்திய போட்டிகளில் ஒதுங்கியிருந்த மழை இப்போட்டியில் மீண்டும் விளையாடுவதற்கு தயாராகியுள்ளது. குறிப்பாக இந்த மைதானத்தை சுற்றிய பகுதிகளில் போட்டி நாளன்று சராசரியாக 91% இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது.

- Advertisement -

இருப்பினும் போட்டி துவங்கும் 1 மணியளவில் 40% என குறையும் மழை படிப்படியாக குறைவதற்கு வாய்ப்புள்ளது. அதனால் தாமதமாக துவங்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த போட்டியை ஓவர்கள் குறைத்து முடிவு காணும் வகையில் அம்பயர்கள் நடத்த முயற்சிப்பார்கள் என்று நம்பலாம்.

பிட்ச் ரிப்போர்ட்:
விசாகப்பட்டினம் மைதானம் வரலாற்றில் ஒருநாள் கிரிக்கெட்டில் பெரும்பாலும் பேட்டிங்க்கு சாதகமாக இருந்து வருகிறது. குறிப்பாக இதுவரை இங்கு நடைபெற்ற 9 ஒருநாள் போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 265 ரன்களாகும். மேலும் 6.04 என்ற ரன்ரேட் அடிப்படையில் இந்த மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடித்துள்ளனர்.

- Advertisement -

இதிலிருந்து ஆரம்பகட்ட சூழ்நிலைகளை புரிந்து கொண்டு நன்கு செட்டிலாகி விளையாடும் பேட்ஸ்மேன்ன்கள் எளிதாக தங்களது அணிக்கு 300 ரன்கள் வரை குவிக்க அதிக வாய்ப்புள்ளது என்றே சொல்லலாம். அதே சமயம் இந்த மைதானத்தில் ஸ்பின்னர்கள் மிடில் ஓவரில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி விக்கெட்டுகளை எடுக்கலாம். அதே போல மழைக்கான வாய்ப்பு இருப்பதால் புதிய பந்தில் ஸ்விங் செய்யும் வேகப்பந்து வீச்சாளர்கள் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.

இதையும் படிங்க:ஐபிஎல் 2023 : காயமடைந்த வில் ஜேக்ஸ்க்கு பதிலாக அதிரடி நியூஸிலாந்து ஆல் ரவுண்டரை வாங்கிய பெங்களூரு – ஆர்சிபி ரசிகர்கள் மகிழ்ச்சி

இங்கு வரலாற்றில் நிறைய போட்டிகளில் சேசிங் செய்த அணிகள் வென்றுள்ளதாலும் இது இரவு நேர போட்டிக்காக நடைபெறுவதாலும் இப்போட்டியில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீச தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement