இவர் ஒருத்தர் தான் இந்திய அணி இப்படி மோசமான தோல்வியை சந்திக்க காரணம் – மொத்தமா செய்ஞ்சிட்டாரு

Shaheen-afridi
- Advertisement -

உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 151 ரன்களை மட்டும் குவிக்க அடுத்ததாக விளையாடிய பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதற்கு முன்னர் உலக கோப்பை தொடர்களில் இந்திய அணி வீழ்த்தாத பாகிஸ்தான் அணி முதல் முறையாக இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அதிலும் குறிப்பாக ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் 151 ரன்களை சேஸிங் செய்து வெற்றி பெற்றது பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

rizwan

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷாகின் அப்ரிடி திகழ்ந்தார். ஏனெனில் தற்போது நடைபெற்று வரும் t20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் துவக்க வீரர்கள் தான் மற்ற அணிகளை காட்டிலும் பலமான துவக்க வீரர்களாக பார்க்கப்படுகின்றனர். ராகுல் மற்றும் ரோஹித் ஆகியோர் மிகச்சிறப்பான அதிரடியான துவக்கத்தை கொடுக்கக் கூடியவர்கள்.

அப்படி இருக்கும் இவர்களை ஷாகின் அப்ரிடி நேற்றைய போட்டியில் அசைத்துப் பார்த்தார். முதல் ஓவரிலேயே ரோகித் சர்மாவை ரன் எடுக்கவிடாமல் முதல்பத்திலேயே ஆட்டமிழக்க வைத்த ஷாகின் அஃப்ரிடி மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் ராகுவையும் 3 ரன்களில் காலி செய்தார். இப்படி துவக்க வீரர்கள் இருவரையும் 6 ரன்களுக்குள் வீழ்த்தியதால் மிடில் ஆர்டரில் ரன்கள் வராமல் போனது.

shaheen afridi

அதேபோன்று இந்திய அணியின் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கும் விதமாக விளையாடி வந்த விராட் கோலியை 57 எடுத்திருந்தபோது ஆட்டத்தின் 19வது ஓவரில் வீழ்த்தி மீண்டும் ஒரு திருப்புமுனையை தந்தார். இப்படி இந்திய அணியின் முன்னணி வீரர்களான ராகுல், ரோஹித், கோலி ஆகிய மூன்று முக்கிய வீரர்களையும் வீழ்த்தி பாகிஸ்தான் அணிக்கு வெற்றி வாய்ப்பை அவரே பலப்படுத்தினார் என்றே கூறலாம்.

- Advertisement -

இதையும் படிங்க : அம்பயரின் கவனக்குறைவால் ஆட்டமிழந்த கே.எல் ராகுல். வெளியான ஆதாரம் – ரசிகர்கள் கொதிப்பு

அவர் ஒருவரது சிறப்பான பந்துவீச்சு மற்றும் வீரர்கள் அனைவரையும் சிறப்பாக செயல்பட வைத்தது நேற்றைய தோல்விக்குப் பிறகு பேசிய விராத் கோலியும் : டாப் ஆர்டரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் ரன் குவிப்பில் தொய்வு ஏற்பட்டதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியில் 4 ஓவர் வீசிய ஷாஹின் அப்ரிடி 31 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவரது இந்த சிறப்பான பந்து வீச்சுக்கு பாராட்டுகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement