அம்பயரின் கவனக்குறைவால் ஆட்டமிழந்தாரா கே.எல் ராகுல்? வெளியான ஆதாரம் – ரசிகர்கள் கொதிப்பு

Rahul-1
- Advertisement -

நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் டி20 உலக கோப்பை லீக் போட்டியில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்த பாகிஸ்தான் அணி இந்திய அணி வீரர்களின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி சிறப்பான துவக்கத்தை கண்டது. கடைசிவரை இந்திய அணியின் வீரர்களை அதிரடியாக ஆட விடாமல் அசத்தலான பந்து வீச்சை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணியை 151 ரன்களுக்கு சுருட்டியது.

pak

- Advertisement -

அதன் பின்னர் 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் 17.5 ஓவர்களில் 152 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் முதல் ஓவரிலேயே ரோகித் சர்மா LBW மூலம் ஆட்டமிழந்து வெளியேற இந்திய அணி சிக்கலை சந்தித்தது. பின்னர் மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் மற்றொரு தொடக்க வீரரான ராகுலும் 8 பந்துகளை சந்தித்த நிலையில் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இப்படி தொடக்க வீரர்களின் விக்கெட்டை அடுத்தடுத்து இழந்து தான் இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது கே.எல் ராகுல் ஆட்டமிழந்த பந்து நோபால் என்று தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக அம்பயரின் கவனக்குறைவால் ராகுல் விக்கெட்டை இழந்துள்ளார். இதுகுறித்த ஆதாரமும் தற்போது வெளியாகியுள்ளது. ராகுல் ஆட்டமிழந்த போது ஷாஹீன் அப்ரிடி நோபால் வீசியதாக ட்விட்டர் வாசிகள் பலரும் கீழ்கண்ட புகைப்படத்தை வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

rahul

அதன்படி மூன்றாவது ஓவரின் முதல் பந்தை வீசிய ஷாஹீன் அப்ரிடி காலை கிரீசுக்கு வெளியே வைத்து பந்துவீசி உள்ளது போன்ற புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது. அம்பயரின் கவனக்குறைவு காரணமாக தவறுதலாக ராகுல் விக்கெட்டை இழந்து வெளியேறியதாகவும், இதன் காரணமாக இந்திய அணி பெரிய ரன் குவிப்பை தவறவிட்டது மட்டுமின்றி போட்டியிலும் தோல்வியை சந்தித்தது என்றும் நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.

- Advertisement -

இதையும் படிங்க : ரோஹித்துக்கு பதிலாக இவரை சேர்க்கனுமா அதிரடியான பதிலை வெளிப்படுத்திய விராட் கோலி – விவரம் இதோ

அம்பயரின் இந்த கவனக்குறைவை கண்டித்து ரசிகர்கள் இந்த நோபால் புகைப்படத்தை இணையத்தில் வைரலாக பகிர்ந்து வருகின்றனர். மேலும் ராகுல் ஆட்டம் இழக்காமல் இருந்திருந்தால் அணியின் ஸ்கோர் நிச்சயம் உயர்ந்திருக்கும் என்றும், பாகிஸ்தான் அணியை வீழ்த்த ஒரு வாய்ப்பு இருந்திருக்கும் என்றும் ரசிகர்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement