ரோஹித்துக்கு பதிலாக இவரை சேர்க்கனுமா அதிரடியான பதிலை வெளிப்படுத்திய விராட் கோலி – விவரம் இதோ

rohith

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி படுமோசமான தோல்வியை சந்தித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி பாகிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தாலும் கோலி மற்றும் ரிஷப் ரிஷப் பண்ட் ஆகியோரது சுமாரான பேட்டிங் காரணமாக 151 ரன்களை குவித்தது.

azam 1

ஆனால் அதன் பிறகு களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் விக்கெட்டை இழக்காமல் 17.5 ஓவர்களில் 152 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றனர். இந்த போட்டியின் வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகளும், இந்திய அணிக்கு விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்து காணொளி வாயிலான பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி பங்கேற்றார். அதில் பல்வேறு கேள்விகள் விராட் கோலியிடம் எழுப்பப்பட்டன. அதில் ஒரு நிருபர் ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு பார்மில் இருக்கும் இஷான் கிஷனை அணியில் சேர்ப்பீர்களா ? என்று கேள்வி எழுப்பினார்.

rohith 1

இதனை சற்றும் எதிர்பாராத கோலி நீங்கள் உண்மையாகத்தான் கேட்கிறீர்களா ? என்று மீண்டும் கேள்வி எழுப்பினார். மேலும் 20 ஓவர் போட்டிகளில் ரோகித் சர்மா போன்ற ஒரு சிறப்பான வீரரை நீக்க வேண்டுமா ? என்றும் அவர் சிரித்தார். பின்னர் நீங்கள் சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தால் முன்கூட்டியே என்னிடம் தெரிவித்து விடுங்கள் அதற்கேற்றார்போல் நான் பதில் அளிக்கிறேன் என செய்தியாளருக்கு பதிலடி கொடுத்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய அணியை எளிதாக வீழ்த்தி நாங்க பெற்ற வெற்றிக்கு இதுவே காரணம் – பாபர் அசாம் பேட்டி

இந்த பேட்டி குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஏற்கனவே இந்த போட்டியில் அடைந்த தோல்விக்குப் பிறகு பேசிய கோலி இந்த ஒரு தோல்வியால் எதுவும் முடிந்து விடாது என்றும் இதுதான் இந்த தொடரின் முதல் போட்டி இது கடைசி போட்டி கிடையாது எனவே இந்தத் தோல்வியிலிருந்து மீண்டு வருவோம் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement