இந்திய அணியை எளிதாக வீழ்த்தி நாங்க பெற்ற வெற்றிக்கு இதுவே காரணம் – பாபர் அசாம் பேட்டி

azam-1

டி20 உலக கோப்பை தொடரின் மிகப்பெரிய போட்டியாக ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டிக்கு முன்னர் உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்தியது இல்லை என்ற நிலைமை இருந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது.

INDvsPAK

இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 151 ரன்களை மட்டுமே குவிக்க அடுத்ததாக விளையாடிய பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் கூட இழக்காமல் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியின் சார்பாக துவக்க வீரர்கள் ரிஸ்வான் 79 ரன்களும் கேப்டன் பாபர் அசாம் 68 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி உலகக் கோப்பை போட்டிகளில் முதல் முறையாக இந்திய அணியை வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது.

- Advertisement -

ஏற்கனவே இந்த போட்டி துவங்கும் முன்னர் பழைய வரலாறுகளை பற்றி நாங்கள் கவலைப்படப் போவதில்லை என்றும் இந்த போட்டியை கைப்பற்றி இனி வரலாறு படைக்க இருக்கிறோம் என பாபர் அசாம் கூறியதற்கு ஏற்ப இந்த போட்டியில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி அசத்தியது. இந்நிலையில் இந்திய அணியை இவ்வளவு எளிதாக வீழ்த்த என்ன காரணம் என்பது குறித்து போட்டி முடிந்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேட்டியளித்திருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த வெற்றி எங்கள் அணி வீரர்களின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி. நாங்கள் ஒரு அணியாக இந்த போட்டியில் எங்களது முழு அர்ப்பணிப்பையும் அளித்தோம்.

shaheen afridi 2

போட்டியின் துவக்கத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தியது மிகவும் உதவியது. துவக்கத்திலேயே அடுத்தடுத்து நாங்கள் விக்கெட்டை வீழ்த்தியதால் எங்களுக்கு நம்பிக்கை பிறந்தது. அதுமட்டுமின்றி எங்கள் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசினர். எங்களது திட்டங்களையும் சரியாக செயல்படுத்தினோம். அதோடு பேட்டிங்கில் முடிந்த அளவு இறுதிவரை நின்று பேட் செய்ய வேண்டும் என ஓப்பனர்கள் ஆகிய நாங்கள் நினைத்தோம். அதன்படி இந்த போட்டியில் இந்திய அணியை வீழ்த்தியது மிகவும் மகிழ்ச்சி.

- Advertisement -

இதையும் படிங்க : கொஞ்சம் கூட வாய்ப்பே குடுக்கல. எங்களின் இந்த தோல்விக்கு இதுவே காரணம் – விராட் கோலி வேதனை

இந்த வெற்றியின் மூலம் எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை கிடைத்துள்ளது. இனிவரும் ஒவ்வொரு போட்டியிலும் இதேபோன்று அணுகி இந்த தொடரில் சிறப்பான வெற்றி பெறுவோம் என பாபர் அசாம் கூறினார். மேலும் இந்த போட்டிக்கு நாங்கள் சரியான முறையில் தயாராகி இருந்தோம் என்றும் பழைய வரலாறுகளை மனதில் வைக்காமல் சரியான பயிற்சி மற்றும் நம்பிக்கையுடன் களம் இறங்கி வெற்றி பெற்றுள்ளோம் என அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement