கொஞ்சம் கூட வாய்ப்பே குடுக்கல. எங்களின் இந்த தோல்விக்கு இதுவே காரணம் – விராட் கோலி வேதனை

Kohli
- Advertisement -

துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின. ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று ஆரவாரத்துடன் துவங்கிய இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் ஓவரிலேயே ரோகித் கோல்டன் டக் அவுட்டாகி வெளியேற அதற்கு அடுத்து மூன்றாவது ஓவரில் ராகுலும் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் ஒரு பக்கம் கோலி நிதானித்து விளையாட அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹார்டிக் பாண்டியா அனைவரும் அடுத்தடுத்து ஆட்டம் இருந்து வெளியேற இறுதியில் கோலியும் 57 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

shaheen afridi 1

- Advertisement -

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணியால் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது. அதன் பின்னர் 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 17.5 ஓவர்களில் 152 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் மூலம் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி புதிய வரலாறு படைத்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில் : நாங்கள் இந்த போட்டியில் சரியான கிரிக்கெட்டை வெளிப்படுத்தவில்லை. பாகிஸ்தான் அணி வீரர்கள் இப்போட்டியில் சிறப்பாக விளையாடினர்.

azam

பந்துவீச்சில் அவர்கள் முதல் 20 ரன்களில் 3 விக்கெட்டை வீழ்த்தி நல்ல தொடக்கத்தை பெற்றிருந்தனர். இந்த போட்டியின் முதல் பாதியில் பேட்டிங் செய்ய சற்று கடினமாக இருந்தது. ஆனால் இரண்டாவது பாதியின் போது அவர்கள் எளிதாக விளையாடி விட்டார்கள். நாங்கள் முதலில் பேட்டிங் செய்த போது முதல் 10 ஓவர்களில் சரிவை கண்டாலும் இரண்டாவது பாதியில் இன்னும் 15 முதல் 20 ரன்கள் கூடுதலாக அடித்திருந்தால் ஒரு வாய்ப்பு இருந்திருக்கும்.

- Advertisement -

இதையும் படிங்க : போட்டி முடியும் முன்னரே ஆஸ்பிடலுக்கு சென்ற இந்திய வீரர் – அணியிலிருந்து நீக்கப்பட வாய்ப்பு

ஆனால் பாகிஸ்தான் பவுலர்கள் எந்த இடத்திலும் எங்களுக்கு ரன்கள் அடிக்க இடம் தரவில்லை. இந்த போட்டி இந்த தொடரின் முதல் போட்டி தான், கடைசி போட்டி கிடையாது. எனவே இந்தத் தோல்வியிலிருந்து மீண்டு வருவோம் என கேப்டன் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement