IND vs ZIM : ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பிடித்து இருந்தாலும் அவரு விளையாடுறது கஷ்டம் – பாவம் அவரு

IND
- Advertisement -

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை ஆகஸ்ட் 18-ஆம் தேதி ஜிம்பாப்வேயில் உள்ள ஹராரே நகரில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக கே.எல் ராகுல் தலைமையில் 16 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு வீரர்கள் அனைவரும் அங்கு சென்று தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

INDvsZIM

- Advertisement -

நாளை துவங்க உள்ள இந்த முதலாவது போட்டியில் எந்தெந்த வீரர்கள் பிளேயிங் லெவனனில் இடம் பெறுவார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதே வேளையில் இந்த தொடரில் சிறப்பாக விளையாடும் இளம் வீரர்கள் இனிவரும் தொடர்களிலும் இடம் பெறுவார்கள் என்பதனால் இந்த தொடர் அவர்கள் அனைவருக்குமே ஒரு வாய்ப்பாக மாறியுள்ளது.

அதோடு இந்த தொடரில் பங்கேற்று விளையாடும் அனைத்து வீரர்களின் செயல்பாடும் எவ்வாறு இருக்கப்போகிறது என்பதை தேர்வுக்குழுவும் கவனிப்பதில் உன்னிப்பாக காத்திருக்கிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக வெளியேறினார்.

Shahbaz-Ahmed

இதன் காரணமாக அவருக்கு பதிலாக இளம் வீரரான சபாஷ் அகமதுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இடதுகை சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான இவருக்கு அணியில் வாய்ப்பு கிடைத்தாலும் அவர் பிளேயிங் லெவனில் இடம்பெறுவது கஷ்டம் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

மேலும் இந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் அவர் ஒரு போட்டியில் கூட விளையாட மாட்டார் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே அணியில் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக அக்சர் பட்டேல் இருப்பதினால் அவருக்கு இடம் கிடைக்காது என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : IND vs ZIM : கேப்டனாக ஓப்பனிங் இடத்தை அவர்களுக்கு விட்டுக்கொடுங்க – ராகுலுக்கு முன்னாள் வீரர் வைத்த கோரிக்கை

அக்சர் பட்டேலை பொறுத்தவரை ஜடேஜாவிற்கே போட்டி அளிக்கும் வீரராக தற்போது வளர்ந்து நிற்கிறார். எனவே அவரை தாண்டி சபாஷ் அகமதுக்கு இந்த தொடரில் வாய்ப்பு கிடைப்பது என்பது முடியாத விடயமாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement