IND vs ZIM : கேப்டனாக ஓப்பனிங் இடத்தை அவர்களுக்கு விட்டுக்கொடுங்க – ராகுலுக்கு முன்னாள் வீரர் வைத்த கோரிக்கை

Rahul
- Advertisement -

ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. ஐசிசி ஒன்டே சூப்பர் லீக் தொடரின் அங்கமாக நடைபெறும் இந்த தொடர் ஆகஸ்ட் 18, 20, 22 ஆகிய தேதிகளில் தலைநகர் ஹராரேயில் நடைபெறுகிறது. இந்த தொடருக்காக ஷிகர் தவான் தலைமையில் அறிவிக்கப்பட்டிருந்த அணிக்கு கடைசி நேரத்தில் கேஎல் ராகுல் கேப்டனாக செயல்படுவார் என்று பிசிசிஐ அறிவித்தது. அந்த நிலைமையில் கேஎல் ராகுல் மற்றும் பயிற்சியாளராக ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மன் தலைமையில் ஜிம்பாப்வே சென்றடைந்துள்ள இந்திய அணி இத்தொடரை வெல்வதற்காக தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

INDvsZIM RAHUL

சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களை வைத்து வரலாற்றிலேயே முதல் முறையாக ஒயிட்வாஷ் வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்த இந்திய அணியில் இடம் பிடித்திருந்த பெரும்பாலான வீரர்கள் இந்த தொடரிலும் விளையாடுகின்றனர். அதனால் நல்ல பார்மிலும் புத்துணர்ச்சியுடனும் இருக்கும் இந்தியா வெஸ்ட் இண்டீசை விட பலத்தில் குறைந்த ஜிம்பாப்வேவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் கடைசியாக வங்கதேசத்தை 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் எதிர்கொண்ட ஜிம்பாப்வே சொந்த மண்ணில் அபாரமாக செயல்பட்டு அந்த 2 கோப்பைகளையும் வென்றது.

- Advertisement -

ஓப்பனிங் யார்:
அதனால் நல்ல பார்மில் இருக்கும் அந்த அணியும் இந்த தொடரில் இந்தியாவுக்கு சவால் கொடுக்கும் வகையில் போராடுவோம் என்று ஏற்கனவே எச்சரித்துள்ளது. இந்த நிலையில் இத்தொடரில் கடைசி நேரத்தில் கேப்டனாக கேஎல் ராகுல் அறிவிக்கப்பட்டதால் அவரே தொடக்க வீரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த சில மாதங்களாக காயத்தால் அணியிலிருந்து விலகியிருந்த அவர் விரைவில் நடைபெறும் ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக பார்முக்கு திரும்ப ஓப்பனிங் இடத்தில் களமிறங்க வேண்டியது அவசியமாகியுள்ளது.

Shubman Gill 98

எனவே அவருடன் சீனியர் ஷிகர் தவான் மற்றொரு தொடக்க வீரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஓப்பனிங் இடத்தில் ஒரு இளம் வீரருக்கு வாய்ப்பு கிடைக்காத நிலைமை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் அபாரமாக பேட்டிங் செய்த இளம் வீரர் சுப்மன் கில் 3 போட்டிகளில் 205 ரன்களை 102.50 என்ற சூப்பரான சராசரியில் வெளுத்து வாங்கி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி தொடர் நாயகன் விருது வென்ற போதிலும் இந்த தொடரில் அதே இடத்தில் களமிறங்கும் வாய்ப்பு கிடைக்காத நிலைமை ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

கேப்டன் பொறுப்பு:
இந்நிலையில் கேஎல் ராகுல் கேப்டனாக இருப்பதால் தொடக்க வீரராக விளையாடுவது அவருடைய விருப்பம், அவருடைய முடிவு என்று தெரிவிக்கும் முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் ஒரு கேப்டனாக அணியின் நலனை விரும்பினால் சுப்மன் கில் போன்ற நல்ல பார்மில் இருக்கும் இளம் வீரருக்கு தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “கேஎல் ராகுல் இதற்கு முன் ஒருநாள் கிரிக்கெட்டில் 5வது இடத்தில் பேட்டிங் செய்துள்ளார். ஆசிய கோப்பைக்கு முன்பாக பயிற்சி எடுக்க விரும்பினால் அவர் இந்த தொடரில் தொடக்க வீரராக களமிறங்கலாம். ஆனால் இதற்கு முன் அவர் 5வது இடத்தில் விளையாடியுள்ளார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்”

Kaif

“மறுபுறம் கில் நல்ல பார்மில் உள்ளார். குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஷிகர் தவானுடன் அவர் வெற்றிக்கான பார்ட்னர்ஷிப் அமைத்தார். கில் மற்றும் தவான் ஆகிய இருவருமே நல்ல பார்மில் இருக்கின்றனர். எனவே அவர்கள் தொடக்க வீரராக களமிறங்கலாம், ராகுல் 3வது இடத்தில் விளையாடலாம். ஒருவேளை சமீபத்தில் காயத்தால் அணியிலிருந்து விலகியிருந்த ராகுல் தொடக்க வீரராக களமிறங்க விரும்பும் பட்சத்தில் கேப்டனாக இருப்பதால் தமது விருப்பப்படி செய்யலாம்.

- Advertisement -

ஆனால் என்னைப் பொறுத்தவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அசத்திய ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் ஆகியோரை தொடக்க வீரர்களாக நான் பார்க்க விரும்புகிறேன். ராகுல் 3வது இடத்தில் விளையாடலாம்” என்று கூறினார்.

இதையும் படிங்க : தவறான வழியில் சென்று சச்சினிடம் உதவி கேட்காமல் கேட்கும் நிலையில் வினோத் காம்ப்ளி – பரிதாப கோரிக்கை இதோ

அவர் கூறுவது போல வரலாற்றில் சௌரவ் கங்குலி, எம்எஸ் தோனி போன்றவர்கள் அணியின் நலனுக்காக தங்களது டாப் ஆர்டர் இடத்தை இளம் வீரர்களுக்கு விட்டுக்கொடுத்து மிடில் ஆர்டரில் விளையாடியதாலேயே மகத்தான சாதனைகளைப் படைத்து வரலாற்றில் சிறந்த கேப்டன்களாக போற்றப்படுகிறார்கள். அந்த வரிசையில் தன்னை பற்றி கவலைப்படாமல் அணியின் நலனுக்காக இந்த ஜிம்பாப்வே தொடரில் ராகுல் என்ன முடிவெடுப்பார் என்று பொருத்திருந்து பார்க்கலாம்.

Advertisement