தவறான வழியில் சென்று சச்சினிடம் உதவி கேட்காமல் கேட்கும் நிலையில் வினோத் காம்ப்ளி – பரிதாப கோரிக்கை இதோ

Kambli
- Advertisement -

எந்தத் துறையாக இருந்தாலும் திறமை இருந்தும் அதை சரியாக பயன்படுத்தாமல் தவறான வழியில் சென்றால் வெற்றியை நழுவ விட்டு மோசமான நிலையை சந்திக்க நேரிடும். கிரிக்கெட்டில் அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக முன்னாள் இந்திய வீரர் வினோத் காம்பளி திகழ்கிறார் என்றே கூறலாம். ஜாம்பவான் சச்சினின் நெருங்கிய நண்பரான இவர் அவருடன் பள்ளி அளவிலான கிரிக்கெட்டில் சாதனை பார்ட்னர்ஷிப் அமைத்து 90களில் இந்தியாவுக்காக விளையாட அறிமுகமானார். தனது திறமைக்கு அடையாளமாக முதல் 7 போட்டிகளில் 2 இரட்டை சதங்கள் உட்பட 113.29 என்ற அபாரமான சராசரியில் ரன்களை குவித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 1000 ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்த அவர் அதன்பின் பார்மை இழந்து 7 முறை இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்த போதிலும் அதில் எதிலுமே நிரந்தரமான இடத்தைப் பிடிக்கும் அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை.

kambli

அதனால் மொத்தமாக வாய்ப்பை இழந்த அவர் அதன்பின் மது, மாது போன்ற தவறான வழிகளில் சென்று இந்தியாவுக்காக விளையாடிய வீரர் என்ற நற்பெயரையும் கெடுத்து கொள்ளும் வகையில் சமீப காலங்களில் நடந்து கொண்டார். குறிப்பாக ஒரு வங்கி வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டதில் இவர் மீது வழக்கு பதிவு செய்த மும்பை காவல்துறை சமீபத்தில் குடிபோதையில் கார் ஓட்டி குடியிருப்பு பகுதிகளின் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக கைது செய்து சிறையில் அடைத்தது.

- Advertisement -

பரிதாப நிலை:
அதுபோன்ற சர்ச்சைகளில் சிக்கியதால் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெற்றிருந்த நல்ல பெயரையும் கெடுத்துக் கொண்ட அவர் தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளார். இந்தியாவுக்காக விளையாடிய முன்னாள் கிரிக்கெட் வீரர் என்ற முறையில் பிசிசிஐ வழங்கும் மாதாந்திர பென்ஷன் தொகையான ரூபாய் 30000 மட்டுமே தற்போதைக்கு அவருடைய வருமானமாக இருக்கிறது. அதை மட்டுமே வைத்து குடும்பத்தையும் காலத்தை நடத்தி வரும் அவர் தற்போது பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளதால் தமக்கு யாராவது பயிற்சியாளர் போன்ற வேலையை கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும் என்ற கோரிக்கை வைத்துள்ளார்.

Kambli-1

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் ஓய்வு பெற்ற கிரிக்கெட்டர் என்பதன் அடிப்படையில் முற்றிலுமாக பிசிசிஐ கொடுக்கும் பென்சனை மட்டுமே சார்ந்துள்ளேன். இப்போதைக்கு இந்திய வாரியத்தால் கிடைக்கும் அந்த ஒரே ஒரு வருமானத்திற்காக நான் மிகவும் நன்றியை தெரிவிக்கிறேன். ஏனெனில் அதுதான் எனது குடும்பத்தை காப்பாற்றுகிறது. இதிலிருந்து வெளிவர இளம் வீரர்களுடன் வேலை செய்யும் வகையில் வேலை தேவைப்படுகிறது. அன்மோல் மஜும்தாரை மும்பை தங்களுடைய பயிற்சியாளராக மீண்டும் தக்க வைத்துக்கொண்டுள்ளது எனக்கு தெரியும் என்பதால் வேறு இடத்தில் தேவைப்பட்டால் நான் பணிபுரிய தயாராக இருக்கிறேன்”

- Advertisement -

“நான் மும்பை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் உதவி கேட்டேன். மேலும் சிஐசி கமிட்டியில் இடம் பிடித்து இருந்தாலும் அது கௌரவ வேலையாகும். என்னுடைய குடும்பத்தை காப்பாற்ற வேண்டியுள்ளதால் மும்பை கிரிக்கெட் வாரியத்திடம் உதவி கேட்டுள்ளேன். அதாவது உங்களுக்கு பயிற்சியாளராக செயல்பட தேவையிருந்தால் வான்கடே அல்லது பிகேசி ஆகிய மைதானங்களுக்கு வந்து செயல்பட தயார் என்று பலமுறை உதவி கோரியுள்ளேன். இதற்கு முன்பும் எனக்கு மும்பை கிரிக்கெட் நிறைய உதவிகளை செய்துள்ளது. எனது வாழ்க்கையை இந்த கிரிக்கெட்டை மையமாக வைத்து வாழ்கிறேன்” என்று கூறினார்.

kambli

இதற்கு முன் மும்பை டி20 லீக் மற்றும் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அங்கமாக இருக்கும் மிடில்சக்ஸ் க்ளோபல் அகடமி போன்றவற்றில் பயிற்சியாளராக வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்த போதிலும் அதில் தொடர்ச்சியாக பணி புரியாமல் வெளியேறிய வினோத் காம்ப்ளி தற்போது மீண்டும் சச்சினிடம் உதவி கேட்காமல் மறைமுகமாக கேட்டுள்ளார். இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அவருக்கு (சச்சின்) என்னுடைய நிலைமை அனைத்தும் தெரியும். ஆனால் அவரிடம் நான் எந்த உதவியையும் எதிர்பார்க்கவில்லை. அவர் மிடில்சக்ஸ் அகடமியில் பணிபுரியும் வாய்ப்பு கொடுத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது. என்னுடைய மிகச்சிறந்த நண்பரான அவர் எனக்காக எப்போதும் இருப்பார்.

இதையும் படிங்க : வீரர்களிடம் சகிப்பு தன்மையை காட்டவில்லை – முன்னாள் கோச் ரவி சாஸ்திரி மீது தமிழக நட்சத்திர வீரர் அதிருப்தி கருத்து

ஷார்தாஷ்ரம் பள்ளிக்குச் செல்வேன், அங்கு அணியை சந்திக்கும் போது நான் உணவு சாப்பிடுவேன், அங்குதான் சச்சின் எனது நண்பராக கிடைத்தார். நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவன்” என்று கூறினார். இருப்பினும் நன்னடத்தை இல்லாமல் இருப்பதாலேயே இவருக்கு பயிற்சியாளர் பதவியை கொடுக்க அனைவரும் யோசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement