வீரர்களிடம் சகிப்பு தன்மையை காட்டவில்லை – முன்னாள் கோச் ரவி சாஸ்திரி மீது தமிழக நட்சத்திர வீரர் அதிருப்தி கருத்து

Shastri
- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை வெல்லும் வகையில் புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்ற ரோகித் சர்மா – ராகுல் டிராவிட் தலைமை கூட்டணி விறுவிறுப்புடன் செயல்பட்டு வருகிறது. கடந்த டி20 உலகக்கோப்பைக்கு பின்பாக பொறுப்பேற்ற இந்த கூட்டணி கேப்டன்ஷிப் மற்றும் அணியில் நிறைய மாற்றங்களை நிகழ்த்தும் கூட்டணியாக இருந்தாலும் வெற்றி பெறுவதில் பாரபட்சம் காட்டாமல் இதுவரை எந்த தொடர்களிலும் தோற்காமல் வெற்றிநடை போட்டு வருகிறது. இதனால் இதற்கு முன் உலகக்கோப்பையை வென்று தரவில்லை என்பதற்காக விமர்சனங்களுடன் விடைபெற்ற விராட் கோலி – ரவி சாஸ்திரி கூட்டணியால் சாதிக்க முடியாத உலகக்கோப்பை கனியை இவர்கள் எட்டிப்பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.

shastri

கடந்த 2017இல் பயிற்சியாளராக செயல்பட்ட ஜாம்பவான் அனில் கும்ப்ளே உடன் விரிசல் ஏற்படும் வகையில் நடந்து கொண்ட அப்போதைய கேப்டன் விராட் கோலி தமக்கு மிகவும் பிடித்த ரவி சாஸ்திரியை பயிற்சியாளராக நியமிக்க கேட்டார் என்பது இந்திய கிரிக்கெட் வட்டாரத்திற்கு தெரியும். அப்போது முதல் 2021 வரை அவர்களது தலைமையில் இந்திய மண்ணிலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாட்டு மண்ணில் நடந்த சாதாரண இருதரப்பு தொடர்களில் எதிரணிகளை பந்தாடிய இந்தியா 3 வகையான ஐசிசி உலகக் கோப்பைகளிலும் முக்கிய போட்டிகளில் சொதப்பி தோல்விகளை சந்தித்தது.

- Advertisement -

பாதுகாப்பாற்ற உணர்வு:
மேலும் அவர்களது தலைமையில் ஒருசில போட்டிகளில் சுமாராக செயல்பட்ட உலகத்தரம் வாய்ந்த வீரர்களும் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார்கள் அல்லது வெளியேற்றப்பட்டார்கள். அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு தமிழகத்தின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆவார். ஆம் 2010 முதல் தோனியின் முதன்மை சுழல் பந்து வீச்சாளராக ஜொலித்த அவர் 2017இல் தோனி கேப்டனாக விலகியதும் ஒருசில போட்டிகளில் சுமாராக செயல்பட்டார் என்பதற்காக வெள்ளை பந்து கிரிக்கெட்டுக்கே சரிப்பட்டு வரமாட்டார் என்ற வகையில் சஹால் மற்றும் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பளித்த இந்த கூட்டணி அவரை மொத்தமாக கழற்றி விட்டது. அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாடுகளில் உலகமே வாய்ப்பளிக்குமாறு கேட்டுக்கொண்ட அஷ்வினை இந்த கூட்டணி பெஞ்சில் தான் அமர வைத்தது.

Shastri

அதேபோல் பொதுவாகவே பொறுமையாக செயல்படுவார் என்று கருதப்படும் புஜாராவை உசைன் போல்ட் போல ஓட வேண்டாம் அவரில் கால்வாசி ஓடுங்கள் என்று ரவி சாஸ்திரி 2018இல் வெளிப்படையாக விமர்சித்திருந்தார். அந்த நிலைமையில் வீரர்களும் மனிதர்களே அவர்களாலும் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட முடியாது ஆனால் ஆதரவு கொடுத்தால் சிறப்பாக செயல்படுவார்கள் என்ற வகையில் தற்போதுள்ள ராகுல் டிராவிட் தலைமையில் நிறைய வீரர்களுக்கு தேவையான ஆதரவு கொடுப்பதாக 3 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்துள்ள தமிழகத்தின் சீனியர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சகிப்புத்தன்மை இல்லை:
அணி வீரர்களுக்கு ஆதரவளிப்பவராக இருந்த ரவி சாஸ்திரி சகிப்புத்தன்மை இல்லாதவராக இருந்ததாக தெரிவிக்கும் தினேஷ் கார்த்திக் கடைசியாக கடந்த 2019 உலக கோப்பையில் அவரது தலைமையில் விளையாடிய அனுபவத்தை பகிர்ந்து பேசியது பின்வருமாறு. “அவர் (சாஸ்திரி) தாம் விரும்பி எதிர்பார்க்கும் வேகத்தில் பேட்டிங் செய்யாதவரிடம் மிகவும் குறைந்த சகிப்புத்தன்மையை காட்டினார் அல்லது வலைப்பயிற்சி மற்றும் போட்டிகளில் வித்தியாசமாக செயல்படுபவரை வித்தியாசமாக பேட்டிங் செய்ய வேண்டும் என்று கூறுவார்”

Dinesh-Karthik-1

“அதற்காக அவர் பாராட்ட கூடியவராக இல்லை. அணி விளையாடும் விதத்திலிருந்து நாம் எப்படி விளையாட விரும்பினோம் என்பது ரவி சாஸ்திரிக்கு நன்றாக தெரியும். ஆனால் தோல்விகளுக்கு அவரது சகிப்புத் தன்மை மிகவும் குறைவாகவே இருந்தது. அவர் எப்போதும் அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று தள்ளிக் கொண்டே இருப்பார். ரவி சாஸ்திரி ஒரு வீரராக திறமையானவர் அல்ல என்று நினைக்கிறேன். ஆனால் அவர் பயிற்சியாளராக தனது திறமையை நிறைவேற்றினார்.

- Advertisement -

ஒரு பயிற்சியாளராக அவருக்கு அவர் எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாக செயல்பட்டார். ஒரு சாதாரண மனிதரை விட ஒரு பயிற்சியாளராக அவர் சிறந்து விளங்கினார். மேலும் வீரர்களை எப்போதுமே சிறப்பாக செயல்பட்டு ஏதாவது ஸ்பெஷலாக சாதிக்க வேண்டும் என்று தள்ளிக்கொண்டே இருப்பார்” என்று கூறினார்.

இதையும் படிங்க : ஜாஹீர் கான் மாதிரி இந்திய அணியில் கம்பேக் கொடுப்பேன் – கவுன்டியில் கலக்கும் நட்சத்திர இந்திய வீரர் நம்பிக்கை

அதாவது ரவி சாஸ்திரி ஒரு வீரராக இந்தியாவுக்கு செயல்பட்டதை விட பயிற்சியாளராக அபாரமாக செயல்பட்டதாக பாராட்டும் தினேஷ் கார்த்திக் ஏதாவது சாதிக்க வேண்டும் என்பதற்காக வீரர்களுக்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருப்பார் என்று கூறியுள்ளார். ஆனால் அதற்காக எப்போதும் வெற்றியை மட்டும் பெற வேண்டும் என்ற எண்ணத்துடனும் ஒருசில தோல்விகளுக்கு காரணமாகும் வீரர்களிடம் சகிப்புத்தன்மை காட்டாமல் இருந்ததாகவும் தெரிவிக்கிறார்.

Advertisement