பெங்களூரு அணிக்காக சத்தமில்லாமல் சம்பவங்களை செய்து வரும் இளம்வீரர் – இவரை கவனிச்சீங்களா?

RCB
- Advertisement -

ஐபிஎல் வரலாற்றில் ஆண்டுதோறும் மிகப் பெரிய அணியாக பார்க்கப்பட்டு வரும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இதுவரை ஒரு முறை கூட கோப்பையை கைப்பற்றியது இல்லை. ஆண்டுதோறும் பல பலமான வீரர்களை அந்த அணி வைத்திருந்தாலும் இதுவரை கோப்பையை வெல்லாதது பெங்களூர் ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் பெங்களூரு அணியின் மீது அவர்களது ரசிகர்கள் காட்டும் அன்பு மற்றும் பாசம் என்பது அளப்பரியது. அந்த அளவிற்கு எப்போதுமே பெங்களூர் அணியின் சறுக்கலின் போதும் கூட அவர்கள் துணை இருந்திருக்கின்றனர்.

RCB Faf Virat

- Advertisement -

கடந்த ஆண்டு கொஞ்சம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூரு அணி இந்த ஆண்டு மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி வெளியேறியதற்கு பின்னர் தற்போது டு பிளேசிஸ் தலைமையில் விளையாடி வரும் பெங்களூர் அணியானது நடப்பு பதினைந்தாவது ஐபிஎல் தொடரின் முதல் 7 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்று அசத்தி உள்ளது. அதோடு இனி வரும் 7 போட்டிகளில் இன்னும் சில போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட எளிதாக பிளேஆப் சுற்றுக்கு பெங்களூரு அணி முன்னேறி விடும்.

இம்முறை பெங்களூர் அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணங்களாக டூபிளெஸ்ஸிஸ், தினேஷ் கார்த்திக், விராட்கோலி, ஹேசல்வுட், ஹஸரங்கா ஆகியோர் இடம் பெற்றிருப்பதே பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த பெரிய வீரர்களை தாண்டியும் பெங்களூர் அணிக்காக ஒரு இளம் வீரர் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதனை நீங்கள் ஒவ்வொரு போட்டியையும் பார்த்திருந்தால் கவனித்திருக்க முடியும். அந்த வகையில் இளம் ஆல்ரவுண்டர் சபாஷ் அகமது கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பெங்களூரு அணியில் இருந்தாலும் இம்முறையும் அவர் மீது நம்பிக்கை வைத்து பெங்களூர் அணி ஏலத்தின்போது வாங்கி இருந்தது.

Shahbaz ahmed

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு அவரது செயல்பாடு மிகவும் அட்டகாசமாக உள்ளது. குறிப்பாக பெங்களூர் அணி பேட்டிங்கில் சற்று சறுக்கலை சந்திக்கும் போதெல்லாம் அணியின் போக்கை சரிப்படுத்தி பேட்டிங்கில் அவர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த சீசனில் இதுவரை 7 போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் ஐந்து இன்னிங்ஸ்களில் விளையாடி 147 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 171 ரன்களை குவித்துள்ளார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக அவர் ஆடிய 5 இன்னிங்ஸ்களிலும் பெங்களூரு அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய வேளையில் அணியை சரிவில் இருந்து மீட்க அவர் விளையாடிய அற்புதமான இன்னிங்ஸ்களை மறக்கவே முடியாது. அந்த அளவிற்கு அவரது பங்களிப்பு என்பது பெங்களூரு அணியின் வெற்றிக்கு மிக முக்கியமாக உள்ளது. அதேபோன்று பவுலிங்கில் அவ்வப்போது கைகொடுக்கும் அவர் சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

இதையும் படிங்க : விராட் கோலியின் டி20 சாதனையை அதிவேகமாய் உடைத்து கேஎல் ராகுல் புதிய சாதனை – என்னனு பாருங்க?

அதுமட்டுமின்றி பீல்டிங்கிலும் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் அவர் பெங்களூர் அணிக்கு ஒரு பெரிய நட்சத்திர ஆல்ரவுண்டராகவே இந்த ஆண்டு தனது செயல்பாட்டை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. பெரிய பெரிய ஜாம்பவான்கள் வீரர்கள் பெங்களூரு அணியில் இருப்பதால் இவரது பெயர் வெளியே வராமல் இருந்தாலும் அவரது ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement