INDvsZIM : வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக மாற்றுவீரர் அறிவிப்பு – முதன்முறையாக வாய்ப்பை பெற்ற இளம்வீரர்

Washington-Sundar
- Advertisement -

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை மறுதினம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 22-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக கே.எல் ராகுலும் பயிற்சியாளராக வி.வி.எஸ் லட்சுமணனும் செயல்பட இருப்பதினால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

INDvsZIM

- Advertisement -

இந்நிலையில் இந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழக சுழற்பந்துவீச்சு ஆல்ரவுன்டரான வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்திய அணியில் சமீபகாலமாகவே காயம் காரணமாக தொடர்ச்சியாக வாய்ப்புகளை இழந்து வந்த வாஷிங்டன் சுந்தர் இங்கிலாந்து சென்று கவுண்டி கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதன் காரணமாக அவருக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்ட வேளையில் கடைசியாக இங்கிலாந்தில் நடைபெற்ற கவுண்டி போட்டியின் போது தோளில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது அவர் இந்த ஜிம்பாப்வே தொடரிலிருந்தும் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியது.

Sundar-1

மேலும் இதனை பி.சி.சி.ஐ-யும் உறுதி செய்து வாஷிங்டன் சுந்தர் தோளில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஜிம்பாப்வே தொடரிலிருந்து வெளியேறுகிறார் என்று அறிவித்தது. இதன் காரணமாக காயமடைந்த வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக எந்த வீரர் அணியில் சேர்க்கப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் அந்த வகையில் தற்போது காயமடைந்த வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக மாற்றுவீரரை இந்திய அணி அறிவித்துள்ளது. அதன்படி 27 வயதான சபாஷ் அகமது வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு இந்திய அணியில் முதன்முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஐசிசியை கேள்வி கேட்க நீங்க யாரு – மார்க்கஸ் ஸ்டோய்னிஸை விளாசும் முன்னாள் பாக் வீரர், நடந்தது என்ன

27 வயதான சபாஷ் அகமது நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக பேட்டிங்கில் 219 ரன்களையும், பந்துவீச்சில் 16 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியிருந்தார். இதன் காரணமாகவே அவருக்கு இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement