ஐசிசியை கேள்வி கேட்க நீங்க யாரு – மார்க்கஸ் ஸ்டோய்னிஸை விளாசும் முன்னாள் பாக் வீரர், நடந்தது என்ன

Marcus Stoinis Hundred
Advertisement

வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை பின்னுக்கு தள்ளும் வகையில் 21ஆம் நூற்றாண்டில் துவங்கப்பட்ட டி20 கிரிக்கெட் அபார வளர்ச்சி கண்டு வருகிறது. அதை பார்த்து துவங்கப்பட்ட ஐபிஎல் போன்ற டி20 தொடர்கள் இன்று சர்வதேச கிரிக்கெட்டை மிஞ்சும் அளவுக்கு விஸ்வரூப வளர்ச்சி கண்டு ரசிகர்களின் அபிமான கிரிக்கெட்டாக உருவெடுத்துள்ளது. தற்போது அதற்கும் சவால் கொடுக்கும் வகையில் 100 பந்துகளை கொண்ட ஹண்ட்ரேட் எனும் வித்தியாசமான புதிய தொடரை கடந்த வருடம் துவக்கிய இங்கிலாந்து வாரியம் தற்போது அதனுடைய 2வது சீசனை நடத்தி வருகிறது. இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நிறைய வெளிநாட்டு நட்சத்திரங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் அந்த தொடரில் ஆகஸ்ட் 14ஆம் தேதி சௌதேர்ன் ப்ரேவ் மற்றும் ஓவல் இன்வின்சிபல்ஸ் ஆகிய அணிகள் மோதின.

stoinis

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற அப்போட்டியில் அசத்தலாக செயல்பட்ட ஓவல் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அந்த போட்டியில் சௌதேர்ன் அணிக்காக பேட்டிங் செய்து கொண்டிருந்த ஆஸ்திரேலியா நட்சத்திர ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் பாகிஸ்தான் வீரர் முகமது ஹஸ்னைன் வீசிய 142 கி.மீ வேக ஷார்ட் பிட்ச் பந்தில் மிட் ஆஃப் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்படி அவுட்டாகி சென்ற அவர் பெவிலியனுக்கு திரும்புவதற்கு முன்பாக முகமத் ஹஸ்னின் பந்தை எறிகிறார் என்ற வகையில் சைகை செய்துகொண்டே தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

தடைபெற்ற ஹஸ்னின்:
அவரின் இந்த செய்கைக்கு பின் முக்கியமான கதை உள்ளது. ஆம் 22 வயது இளம் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரான முகமத் ஹன்னைன் கடந்த வருடம் ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற பிக்பேஷ் தொடரில் விதிமுறைக்கு புறம்பாக பந்து வீசுவதாக குற்றம் சாட்டப்பட்டார். அதனால் அவரின் பந்துவீச்சை சோதித்த ஐசிசி அவரது பந்துவீச்சு ஆக்சன் விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இல்லை என்பதை கண்டு பிடித்ததால் அதிரடியாக தடை விதித்தது. இருப்பினும் தொடர்ந்து அதன்பின் தனது பந்து வீச்சில் மாற்றத்தை செய்த அவர் அதை ஐசிசிக்கு தெளிவு படுத்தியதால் மீண்டும் விளையாடுவதற்கான அனுமதியைப் பெற்றுள்ளார்.

ஆனால் இன்னும் அவரது பவுலிங் விதிமுறைகளுக்கு புறம்பாக எறியும் வகையில் தான் உள்ளதாக இந்த போட்டியில் அவுட்டான மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இருப்பினும் ஐசிசி அங்கீகரித்த பின்பும் அவர் இவ்வாறு நடந்து கொண்டது நிறைய பாகிஸ்தான் ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் அதிருப்தியடைய வைத்துள்ளது.

- Advertisement -

ஐசிசிக்கு தெரியாதா:
இந்நிலையில் முகமது ஹன்னைன் விதிமுறைக்கு உட்பட்டு தான் பந்துவீசினார் என்று தெரிவிக்கும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் அவரை மீண்டும் விளையாட ஐசிசி சோதிக்காமல் அனுமதித்திருக்குமா அல்லது ஐசிசி மேல் நம்பிக்கை இல்லாமல் அவர் மீது நீங்கள் கேள்வி கேட்கிறார்கள் என்ற வகையில் ஸ்டோனிய்ஸை கடுமையாக விமர்சித்துள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

“அது விதிமுறைக்கு உட்பட்ட பந்துவீச்சு ஆக்சனாகும். அதாவது ஐசிசி அவருடைய பந்துவீச்சை அங்கீகரித்துள்ள போது உங்களுக்கு என்ன? இந்த நிகழ்வு ஐபிஎல், பிஎஸ்எல் அல்லது ஹண்ட்ரட் என எங்கு நடந்திருந்தாலும் அது சர்வதேச கிரிக்கெட்டை அடிப்படையான கொண்ட பேச்சாகும். அதிலும் அவரது பந்து வீச்சை ஐசிசி அதிகாரிகள் சோதித்துப் பார்த்தபின் அனுமதி வழங்கியிருக்கும் போது அதை கேள்வி கேட்க நீங்கள் யார்? ஏனெனில் அந்த சர்ச்சைக்கு உள்ளாகி விமர்சனங்களை சந்தித்து கம்பேக் கொடுத்த ஹஸ்னைன் இப்போதும் அழுத்ததில் தான் விளையாடுகிறார்”

- Advertisement -

“அது மட்டுமின்றி அந்த பந்தில் மற்றவர்கள் யோசிக்கும் அளவுக்கு ஸ்டோனிஸ் நகர்ந்து சென்று விளையாடினார். அதனால் ஏன் அவர் அப்படி விளையாடினார்? வேடிக்கைக்காகவா? எனவே எந்த ஒரு வீரரும் இதுபோல் எல்லை மீறி நடந்தால் அவர்களை தண்டிக்க வேண்டும்” என்று காட்டத்துடன் கூறினார். அப்படி ஐசிசி அங்கீகரித்த பந்துவீச்சு மீது கேள்வி எழுப்பும் வகையில் நடந்து கொண்ட ஸ்டோய்னிஸ் அடிப்படை விதிமுறையை மீறியதற்கு சமமாகும்.

இதையும் படிங்க : ஆக்ரோஷமான விராட் கோலியால் சாதிக்க முடியாததை ரோஹித் சாதித்து காட்டிருக்காரு – முன்னாள் வீரர் கருத்து

அதனால் அந்த போட்டி முடிந்ததும் போட்டியின் நடுவர் டீன் காஸ்கே அவரிடம் விசாரணை நடத்தியதாகவும் அதில் இனிமேல் அவ்வாறு நடந்து கொள்ள மாட்டேன் என்று ஸ்டோனிஸ் உறுதி அளித்ததாகவும் தெரிகிறது. அதன் காரணமாக அவருக்கு எந்தவித தண்டனையும் அபராதமும் விதிக்காமல் போட்டி நடுவர் எச்சரிக்கையுடன் அனுப்பி வைத்ததாகவும் செய்திகள் கூறுகிறது.

Advertisement