இந்தியாவில் 2 சாதகம் இருக்கு.. அப்டினா 2023 உ.கோ பாகிஸ்தானுக்கு தான் – சடாப் கான் உறுதி

Shadab Khan 2
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வதற்காக இந்தியா உட்பட அனைத்து அணிகளும் இறுதிக்கட்டமாக தயாராகி வருகின்றன. இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வெற்றி காண்பதற்காக பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியினர் 2016 டி20 உலகக் கோப்பைக்கு பின் 7 வருடங்கள் கழித்து முதல் முறையாக இந்தியாவுக்கு வந்துள்ளது அந்நாட்டு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

முன்னதாக தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கும் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் உள்ளிட்ட ஓரிரு வீரர்களை தவிர்த்து ஏனைய வீரர்கள் சுமாராக செயல்படுவதால் பாகிஸ்தானின் பேட்டிங் சற்று பலவீனமாக இருக்கிறது. இருப்பினும் உலகத்தரம் வாய்ந்த ஃபாஸ்ட் பவுலிங் அட்டாக்கை கொண்டிருப்பதால் பாகிஸ்தான் எதிரணிகளுக்கு மிகப்பெரிய சவாலை கொடுத்து வெற்றி காணும் என்று நிறைய முன்னாள் வீரர்கள் கணித்தார்கள்.

- Advertisement -

கோப்பை எங்களுக்கே:
ஆனால் அதே பவுலர்களை 2023 ஆசிய கோப்பை அடித்து நொறுக்கிய இந்தியா 228 ரன்கள் வித்தியாசத்தில் வரலாறு காணாத வெற்றியைப் பெற்று சாதனை படைத்தது. அந்த மோசமான தோல்விக்கு மத்தியில் நாசீம் ஷா காயத்தை சந்தித்து வெளியேறியது பாகிஸ்தானுக்கு பெரிய பின்னடைவாகியுள்ளது. இது போக ஆசிய கோப்பையில் 1 விக்கெட் கூட எடுக்க முடியாத அளவுக்கு முதன்மை ஸ்பின்னர் சடாப் கான் மோசமான ஃபார்மில் தவிப்பதும் பாகிஸ்தானுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான பிட்ச்கள் ஃபிளாட்டாகவும் பவுண்டரிகள் சிறிய அளவிலும் இருப்பதால் சிறந்த பவுலிங் அட்டாக்கை கொண்ட பாகிஸ்தான் நிச்சயம் கோப்பையை வெல்லும் என்று துணை கேப்டன் சடாப் கான் உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு. “இத்தொடரில் எந்த அணியில் நல்ல பவுலிங் அட்டாக் இருக்கிறதோ அவர்களே கோப்பையை வெல்வார்கள்”

- Advertisement -

“மேலும் இந்திய சூழ்நிலைகளில் விக்கெட்டுகள் எடுப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. ஏனெனில் பிட்ச் மிகவும் ஃபிளாட்டாகவும் பவுண்டரிகள் மிகவும் சிறியதாகவும் இருக்கின்றன. எனவே பந்து வீச்சில் சிறப்பாக செயல்படும் அணிகள் இந்த தொடரில் கோப்பையை வெல்லும். அந்த வகையில் உலகத்தரம் வாய்ந்த பவுலர்களை கொண்டிருக்கும் நாங்களும் சிறப்பாக செயல்பட்டால் நிச்சயம் இத்தொடரில் வெற்றி வாகை சூடுவோம்”

இதையும் படிங்க: தங்கம் வாங்க தோனி ஸ்டைல் ஃபாலோ பண்ணா மட்டும் போதாது.. கேப்டன் ருதுராஜ் பேட்டி

“என்னுடைய ஃபார்ம் தற்போது சிறப்பாக இல்லை. இது போன்ற சுமாரான செயல்பாடுகள் ஒரு வீரருக்கு மனதளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் ஒரு இடைவெளி கிடைத்தால் அதிலிருந்து வெளிவந்து நிச்சயமாக இந்த உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட முடியும்” என்று கூறினார். அந்த சூழ்நிலையில் நியூசிலாந்துக்கு எதிராக ஹைதராபாத் நகரில் நடைபெற்ற பயிற்சி போட்டியில் பாகிஸ்தான் 345 ரன்கள் குவித்தும் சுமாரான பவுலிங் காரணமாக தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement