விராட் கோலி இல்ல.. அவங்க தான் எனக்கு பிடித்த 2 இந்திய பிளேயர்ஸ் – சடாப் கான் பேட்டி

Shadab Khan
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்றே சொல்லலாம். வரும் அக்டோபர் 5ஆம் தேதி நடைபெறும் இந்த உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா சொந்த மண்ணில் வெல்லுமா என்பதற்கு நிகராக பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிராக காலம் காலமாக தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தை காப்பாற்றுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் காணப்படுகிறது.

அந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இவ்விரு அணிகள் மோதும் போட்டி அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற உள்ளது. முன்னதாக எல்லை பிரச்சனை காரணமாக கடந்த 10 வருடங்களாக இருதரப்பு தொடர்கள் நிறுத்தப்பட்டாலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையேயான நட்பு அதிகரித்து வருகிறது. எடுத்துக்காட்டாக விராட் கோலி ஃபார்மின்றி தடுமாறிய போது இதுவும் கடந்து போகும் என்று பாபர் அசாம் ட்விட்டரில் கொடுத்த ஆதரவை எப்போதுமே மறக்க முடியாது.

- Advertisement -

பிடித்த வீரர்கள்:
அதனால் நாட்டுக்காக விளையாடும் நீங்கள் நட்பை பவுண்டரி எல்லைக்கு வெளியே வைத்து விட்டு ஆக்ரோசத்துடன் மோதிக்கொள்ள வேண்டும் என்று கௌதம் கம்பீர் சமீபத்திய ஆசிய கோப்பையில் இருநாட்டு வீரர்களையும் கடுமையாக விமர்சித்தார். ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாத சாகின் அப்ரிடி சமீபத்தில் அப்பாவான ஜஸ்ப்ரித் பும்ராவை நேரடியாக சந்தித்து பரிசை வழங்கியது போல இருநாட்டு வீரர்களுக்கிடையேயான நட்பு என்பது தொடர்ந்து வருகிறது.

அந்த வரிசையில் இந்திய அணியில் தமக்கு மிகவும் பிடித்த 2 வீரர்களை பாகிஸ்தான் அணியின் துணை கேப்டன் சடாப் கான் தேர்வு செய்துள்ளார். பொதுவாகவே பாகிஸ்தான் ரசிகர்களுக்கும் சரி முன்னாள் வீரர்களுக்கும் சரி மிகவும் பிடித்த இந்திய வீரர் என்றால் அது விராட் கோலியாக இருந்து வருகிறார்.

- Advertisement -

ஆனால் அவரை தேர்வு செய்யாத சடாப் கான் ரோகித் சர்மா தமக்கு மிகவும் பிடித்த இந்திய பேட்ஸ்மேன் என்று கூறியுள்ளார். அதே போல தாம் ஒரு ஸ்பின்னராக இருப்பதால் குல்தீப் யாதவ் மிகவும் பிடித்த இந்திய பவுலர் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “ஒரு பேட்ஸ்மேனாக நான் ரோகித் சர்மாவை மிகவும் விரும்புகிறேன்”

இதையும் படிங்க: இந்தியாவை பாத்து பயப்படுறாங்க.. பாக் அணியில் விரிசல் இருப்பதை நானே பாத்தேன்.. முன்னாள் வீரர் கவலை

“அவர் நன்கு செட்டிலாகி விட்டால் பந்து வீசுவதற்கு மிகவும் கடினமான ஆபத்தான பேட்ஸ்மேனாக இருக்கிறார். அதே போல பவுலர்களில் நான் குல்தீப் யாதவை மிகவும் விரும்புகிறேன். ஏனெனில் நானும் அவரைப் போலவே லெக் ஸ்பினராக இருக்கிறேன். எங்களைப் போன்ற பவுலர்களுக்கு ஃபிளாட்டான பிட்ச்களை கொண்ட இந்திய சூழ்நிலைகளில் பந்து வீசுவது மிகவும் கடினமாக இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement