இந்தியாவை பாத்து பயப்படுறாங்க.. பாக் அணியில் விரிசல் இருப்பதை நானே பாத்தேன்.. முன்னாள் வீரர் கவலை

Moin Khan
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்லப்போவது யார் என்று எதிர்பார்ப்புக்கு நிகராக அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத் நகரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் வெற்றி பெறப்போவது யார் என்று எதிர்பார்ப்பும் காணப்படுகிறது. ஏனெனில் கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல் கௌரவமாக கருதி இருநாட்டு வீரர்களும் ஆக்ரோசத்துடன் மோதிக் கொள்வார்கள் என்பதால் அப்போட்டியில் அனல் பறக்கும் என்றே சொல்லலாம்.

அத்துடன் 1992 முதல் இதுவரை உலகக்கோப்பையில் சந்தித்த 7 போட்டிகளிலும் பாகிஸ்தானை தொடர்ந்து தோற்கடித்துள்ள இந்தியா வெற்றி வாகை சூடியுள்ளது. எனவே அந்த கௌரவத்தை இம்முறை சொந்த மண்ணில் இந்தியா தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் காணப்படுகிறது. மேலும் அதற்கு வெள்ளோட்டமாக சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் 228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வரலாறு காணாத வெற்றி பெற்றது.

- Advertisement -

பாகிஸ்தான் அணியில் விரிசல்:
முன்னதாக ஆசிய கோப்பையில் இந்தியாவிடம் தோல்வியை சந்தித்ததால் பாகிஸ்தான் அணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக நிறைய செய்திகள் வெளியாகின. குறிப்பாக பாபர் அசாம் – ஷாஹீன் அப்ரிடி ஆகியோரிடையே மோதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது அந்நாட்டு ரசிகர்களை கவலையடைய வைத்தது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியில் விரிசல் இருப்பதை தாமே பார்த்ததாக முன்னாள் வீரர் மொயின் கான் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும் இந்திய அணியை கண்டு பாகிஸ்தான் வீரர்கள் பயப்படுவதாகவும் தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நான் அதை 100% பார்த்தேன். வீரர்கள் சிதறிப் போய் காணப்படுகிறார்கள். ரிஸ்வானாக இருந்தாலும் சரி சடாபாக இருந்தாலும் சரி ஷாகினாக இருந்தாலும் சரி பாபருக்கு ஆலோசனைகள் வழங்குவதில் கூட அவர்கள் தயங்குகிறார்கள். அணி எழுச்சி பெறவில்லை என்பது தெரிகிறது”

- Advertisement -

“அவர்களிடைய வெற்றிக்கான எந்த விவாதமும் பரிந்துரைகளும் இல்லை. பாபர் சொல்வதை பின்பற்றுவதற்கு தயாராக இருந்தாலும் அவர்கள் ஆலோசனை கொடுப்பதில்லை. அதே போல இந்தியாவுக்கு எதிரான போட்டியை நினைத்து வீரர்கள் பயப்படுகிறார்கள் என்பது மற்றொரு கவலையளிக்கும் அம்சமாகும். குறிப்பாக தங்களுடைய பரிந்துரைகள் பலிக்காது என்று அவர்கள் பயப்படுகின்றனர். ஒரு வீரராக நீங்கள் எப்போதும் முழு திறமையுடன் 100% பங்களிப்பை அணிக்கு கொடுக்க வேண்டும்”

இதையும் படிங்க: 2014இல் அப்ரிடியிடம் வாங்குன அடி மறந்துடுச்சா? பாக் ரசிகரின் கிண்டலளுக்கு – அஸ்வின் பதிலடி

“அதனால் உங்கள் பரிந்துரைகள் தவறாக இருந்தாலும் பரவாயில்லை அதை கொடுங்கள். ஆனால் அதை செய்யாத உங்களிடம் வெற்றி பெறுவதற்கான பாடி லாங்குவேஜ் கூட தெரியவில்லை. எனவே உடைமாற்றம் அறையில் ஏதோ சிக்கல் இருக்கிறது என்று நான் கருதுகிறேன். இந்த சூழ்நிலையில் உங்களுக்கிடையே எந்த வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றை முடித்து முன்னோக்கி செல்ல வேண்டும்” என்று கூறினார்.

Advertisement