2014இல் அப்ரிடியிடம் வாங்குன அடி மறந்துடுச்சா? பாக் ரசிகரின் கிண்டலளுக்கு – அஸ்வின் பதிலடி

- Advertisement -

அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஐசிசி 2023 உலகக் கோப்பையில் 2011 போல சாம்பியன் பட்டம் வெல்வதற்காக களமிறங்குவதற்கு தயாராகியுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடைசி நேரத்தில் தேர்வாகியுள்ளார். குறிப்பாக ஆசிய கோப்பையில் காயத்தை சந்தித்து வெளியே அக்சர் பட்டேலுக்கு பதிலாக ஆஃப் ஸ்பின்னர் தேவை என்ற நோக்கத்துடன் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

கடந்த 2011 உலகக்கோப்பை உட்பட இந்தியாவுக்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் நிறைய வெற்றிகளில் பங்காற்றிய அவர் சர்வதேச அரங்கில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய ஆஃப் ஸ்பின்னராக சாதனை படைத்துள்ளார். மேலும் உலகிலேயே டெஸ்ட் போட்டிகளில் அதிக இடது கை வீரர்களை அவுட்டாக்கிய பவுலர் என்ற தனித்துவமான உலக சாதனையும் படைத்துள்ள அவர் இந்த உலகக் கோப்பையில் எதிரணியில் இருக்கும் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்திய அணியில் தேர்வாகியுள்ளார்.

- Advertisement -

அஸ்வின் பதிலடி:
அப்படி அனுபவம், திறமை மற்றும் தரத்தை கொண்டிருப்பதால் அதிர்ஷ்டத்தின் உதவியுடன் அவர் பெற்ற வாய்ப்புக்கு சில முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அந்த சூழ்நிலையில் கோப்பைக்கு தேர்வான தம்முடைய நண்பன் அஸ்வினிடம் மற்றொரு தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நேரடியாக பேட்டி எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

குறிப்பாக உங்களுக்காக என்னுடைய சட்டை வியர்வையால் நனையும் அளவுக்கு காத்திருந்தேன் என்ற தலைப்புடன் தினேஷ் கார்த்திக் இந்த புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அதை பார்த்த அஸ்வின் நீங்கள் காத்திருந்தது எனக்கு தெரியாது நண்பா என்று பதிலளித்தார். ஆனால் அதைப் பார்த்த ஒரு பாகிஸ்தான் ரசிகர் வயித்தெரிச்சலில் “ஷாஹித் அப்ரிடி அடித்த அந்த 2 சிக்சர்கள் இன்னும் நினைவில் வைத்திருப்பார்” என்று சம்பந்தமின்றி அஸ்வினுக்கு பதிலளித்து வம்பிழுத்தார்.

- Advertisement -

ஆனால் அதற்காக அசராத அஸ்வின் “அது உண்மையாகவே நல்ல ஷாட்டுகள் தம்பி. அவரை எப்போதுமே நான் பந்தை சிறப்பாக அடிக்கக்கூடியவராக ரசித்து வருகிறேன்” என்று பாராட்டும் வகையிலான பதிலை அந்த ரசிகருக்கு கொடுத்தார். இருப்பினும் அதை கொஞ்சமும் நினைத்துப் பார்க்காத அந்த ரசிகர் மேற்கொண்டு எதுவும் பேச முடியாமல் “லவ் யூ. பதிலளித்ததற்கு நன்றி. உண்மையாக நீங்களும் நல்ல பவுலர்” என்று அஸ்வினுக்கு பதிலளித்தார்.

Fan Tweet

அந்த வகையில் தம்மை கிண்டலடிக்க வந்த பகைமை நாட்டு ரசிகரை கூட கடைசியில் பாராட்ட வைக்கும் அளவுக்கு அஸ்வின் அந்த இடத்தில் அற்புதமான பதிலடி கொடுத்தார் என்றே சொல்லலாம். முன்னதாக கடந்த 2014 ஆசிய கோப்பையில் சாகித் அப்ரிடி அவருக்கு எதிராக 2 முக்கியமான சிக்ஸர்கள் அடித்து பாகிஸ்தானை வெற்றி பெற வைத்ததை அந்த ரசிகர் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement