அவர தவிர உலகில் வேறு யாராலும் எங்கள தோற்கடிச்சுருக்க முடியாது, அவரை சாய்க்க ஸ்பெஷல் ப்ளான் போடனும் – சடாப் கான் பாராட்டு

Shadab Khan
- Advertisement -

ஐசிசி 2023 உலகக் கோப்பைக்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் தயாராகும் வகையில் நடைபெற்று வரும் 2023 ஆசிய கோப்பை தொடரில் செப்டம்பர் 2ஆம் தேதி மிகவும் வலுவான இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு அனைவரிடமும் எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது. இவ்விரு அணிகளை பொறுத்த வரை தற்சமயத்தில் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருக்கும் பாகிஸ்தான் காயங்கள் எதுவும் இல்லாமல் மிகவும் ஃபிட்டான அணியாக பார்க்கப்படுகிறது. அதனால் கேஎல் ராகுல் போன்ற சில வீரர்கள் காயத்தை சந்தித்துள்ளதால் பலவீனமாக இருக்கும் மிடில் ஆர்டரை கொண்ட இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடிக்கும் என்று நிறைய கணிப்புகள் காணப்படுகின்றன.

அதிலும் குறிப்பாக நட்சத்திர இடதுகை வேகப்பந்து வீச்ச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி புதிய பந்தை ஸ்விங் செய்து ரோகித் சர்மா, கில் போன்ற வலது கை பேட்ஸ்மேன்களுக்கு பெரிய சவாலை கொடுத்து இந்தியாவை தோற்கடிப்பார் என்று சில வெளிநாட்டு வீரர்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் அதே ஷாஹின் அஃப்ரிடி, நசீம் ஷா, ஹரிஷ் ரவூப் ஆகிய தரமான வேகப்பந்து வீச்சாளர்களை 2021 டி20 உலக கோப்பையில் சிறப்பாக எதிர்கொண்ட விராட் கோலி 82* ரன்கள் அடுத்து வரலாற்றின் மகத்தான இன்னிங்ஸ் விளையாடி பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியாவுக்கு மறக்க முடியாத வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

பிளான் பண்ணனும்:
எனவே 2015 உலகக் கோப்பை உட்பட வரலாற்றில் எப்போதுமே பாகிஸ்தானுக்கு எதிராக சிம்ம சொப்பனமாக செயல்பட்டு வரும் விராட் கோலி இம்முறையும் இந்தியாவை காப்பாற்றுவார் என்று முகமது கைஃப் நம்பிக்கை தெரிவித்து இருந்தார். இந்நிலையில் 2022 டி20 உலக கோப்பையில் விராட் கோலியை தவிர்த்து உலகில் வேறு யாராலும் தங்களை தோற்கடித்திருக்க முடியாது என்று பாகிஸ்தான் துணை கேப்டன் ஷடாப் கான் தெரிவித்துள்ளார்.

எனவே ஸ்பெஷல் வீரரான அவருக்கு எதிராக ஸ்பெஷல் திட்டத்தை வகுப்பது அவசியம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நிச்சயமாக அவர் உலகத்தரம் வாய்ந்த வீரர். எனவே அவரை எதிர்கொள்ள நீங்கள் நிறைய திட்டங்களை வகுக்க வேண்டும். ஒரு பேட்ஸ்மேனாக விராட் கோலி எப்போதுமே எங்களுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதிலும் கடந்த டி20 உலகக் கோப்பையில் எங்களுடைய தரமான பந்து வீச்சுக்கு எதிராக அவரை தவிர்த்து வேறு யாருமே அப்படி சிறப்பாக செயல்பட்டிருக்க முடியாது”

- Advertisement -

“குறிப்பாக அவர் எந்த நேரத்திலும் எந்த சமயத்திலும் அதை செய்யக்கூடிய திறமையை கொண்டிருப்பது அவருடைய அழகாகும்” என்று கூறினார். முன்னதாக 2012 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக தான் விராட் கோலி தம்முடைய அதிகபட்ச ஒருநாள் ஸ்கோரை (183) பதிவு செய்துள்ளார்.

இதையும் படிங்க: எந்த டீமா இருந்தாலும் அந்த டீமை தாண்டி வேர்ல்டுகப்பை ஜெயிக்குறது ரொம்ப கஷ்டம் – டூப்ளீஸிஸ் கருத்து

அத்துடன் தோல்வியை சந்தித்த 2021 டி20 உலக கோப்பையிலும் ஷாஹின் அஃப்ரிடி போன்றவர்களை சிறப்பாக எதிர்கொண்ட விராட் கோலி அரை சதமடித்து இந்தியா 151 ரன்கள் எடுப்பதற்கு உதவினார். எனவே கூடவே பிறந்த ஸ்டைல் எப்போது மாறாது என்பது போல் இம்முறையும் பாகிஸ்தானை அவர் சிறப்பாக எதிர்கொள்வார் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement