எந்த டீமா இருந்தாலும் அந்த டீமை தாண்டி வேர்ல்டுகப்பை ஜெயிக்குறது ரொம்ப கஷ்டம் – டூப்ளீஸிஸ் கருத்து

Faf-du-Plessis
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நவம்பர் 19-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 2011-ம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவில் முழுக்க முழுக்க நடைபெறும் இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

அதோடு முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணியே இந்த உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணி என்ற கருத்தையும் தெரிவித்து வருகின்றனர். இப்படி பல்வேறு முன்னாள் வீரர்களும் இந்த உலகக் கோப்பை தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகிறது? என்பது குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான பேஃப் டூபிளெஸ்ஸிஸ் இந்த உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

தென்ஆப்பிரிக்க அணி தற்போது நல்ல டீமாக இருந்தாலும் இந்திய அணியை தாண்டி அவர்களது சொந்த இடத்தில் கோப்பையை வெல்வது என்பது மிகவும் கடினம். அதேபோன்று ஐசிசி கோப்பைகளை அதிகமாக வென்றுள்ள ஆஸ்திரேலிய அணியை தாண்டுவதும் தென்னாப்பிரிக்க அணிக்கு கடினம்.

- Advertisement -

எனவே என்னை பொறுத்தவரை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு தான் இந்த கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. அதிலும் குறிப்பாக இந்திய அணி தங்களது சொந்த மைதானத்தில் விளையாடுவதால் இந்திய அணியை வீழ்த்துவது என்பது எந்த ஒரு அணிக்குமே சவாலாக இருக்கும். எனவே என்னை பொறுத்தவரை இந்த உலகக்கோப்பை வெல்லும் அணிகளில் இந்திய அணி தான் முதன்மை தேர்வாக இருக்கிறது.

இதையும் படிங்க : IND vs PAK : சுப்மன் கில் வேனாம். அவரை விளையாட வையுங்க. அதுதான் கரெக்ட்டா இருக்கும் – சஞ்சய் பாங்கர் கருத்து

ஒயிட் பால் கிரிக்கெட்டில் இந்திய அணி இப்போது மிகச் சிறப்பான ஆதிக்கத்தை செலுத்தி வருவதாலும் துணைக்கண்டத்தில் எந்த ஒரு அணியும் அவர்களை எதிர்த்து விளையாடுவது கடினம் என்பதாலும் இந்திய அணியே இந்த 50 உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement