IND vs PAK : சுப்மன் கில் வேனாம். அவரை விளையாட வையுங்க. அதுதான் கரெக்ட்டா இருக்கும் – சஞ்சய் பாங்கர் கருத்து

Sanjay-Bangar
- Advertisement -

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள் ஆகிய ஆறு அணிகள் மோதும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நேற்று ஆகஸ்ட் 30-ஆம் தேதி முல்தான் நகரில் துவங்கியது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் நடைபெறும் இந்த 13 போட்டிகள் கொண்ட ஆசிய கோப்பை தொடரில் கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது என்பது குறித்து எதிர்பார்ப்பு அனைவரும் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் நேற்று பாகிஸ்தான அணி நேபாள் அணியை 238 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அடுத்ததாக பாகிஸ்தான் அணி செப்டம்பர் 2-ஆம் தேதி இந்திய அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இந்நிலையில் இந்திய அணியானது தங்களது முதல் இரண்டு போட்டியிலும் கே.எல் ராகுலை தவற விட்டுள்ளது.

- Advertisement -

ஆசியக்கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெற்ற 6 நாட்கள் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட கே.எல் ராகுல் வலைப்பயிற்சியின் போது அசவுகரியத்தை உணர்ந்ததால் பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையேயான முதல் இரண்டு போட்டியில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்திய அணியின் விக்கெட் பேட்ஸ்மேனாக இஷான் கிஷன் விளையாட உள்ளார். அப்படி இஷான் கிஷன் விளையாடும் பட்சத்தில் அவர் துவக்க வீரராக மட்டுமே விளையாடுவார் என்பதனால் கூடுதலாக எந்த பேட்ஸ்மேன் இந்திய அணியில் இணைவார் என்பது குறித்து எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

- Advertisement -

இவ்வேளையில் இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரான சஞ்சய் பாங்கர் இஷான் கிசான் பட்சத்தில் துவக்க வீரராக களமிறங்கினால் ஐந்தாவது இடத்தில் சூரியகுமார் யாதவ் விளையாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இஷான் கிஷன் அணிக்குள் நுழையும் பட்சத்தில் ரோகித் சர்மாவுடன் அவரே இடது கை வலதுகை துவக்க வீரராக களம் இறங்க வேண்டும்.

இதையும் படிங்க : பும்ரா இல்ல, ஆசிய கோப்பையில் அந்த இந்திய பவுலரை எதிர்கொள்ள பாபர் அசாம் கஷ்டப்படுவாரு – முகமது கைப் நம்பிக்கை

அதேபோன்று நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சுப்மன் கில் நீக்கப்பட்டு ஐந்தாவது இடத்தில் சூரியகுமார் யாதவை விளையாட வைக்க வேண்டும். ஏனெனில் மூன்றாவது இடத்தில் விராட் கோலியும், நான்காவது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயரும் சிறப்பாக விளையாடி வருவதால் ஐந்தாவது இடத்தில் சூரியகுமாரை விளையாட வைக்கலாம் என்று சஞ்சய் பாங்கர் கூறியுள்ளார்.

Advertisement