பும்ரா இல்ல, ஆசிய கோப்பையில் அந்த இந்திய பவுலரை எதிர்கொள்ள பாபர் அசாம் கஷ்டப்படுவாரு – முகமது கைப் நம்பிக்கை

Mohammed Kaif 2
- Advertisement -

2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 2ஆம் தேதி ஆசிய கண்டத்தின் டாப் அணிகளாகவும் பரம எதிரிகளாகவும் கருதப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவிருப்பது அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அக்டோபர் மாதம் நடைபெறும் 2023 உலகக் கோப்பையில் வெல்லப்போவது யார் என்பதற்கு வெள்ளோட்டமாக நடைபெறும் இப்போட்டியில் களமிறங்கும் இரு அணிகளைப் பொறுத்த வரை பாகிஸ்தான் காயங்கள் இல்லாத வீரர்களுடன் ஃபிட்டான அணியாக இருக்கிறது.

அதனாலேயே தங்களுடைய முதல் போட்டியில் நேபாளை அடித்து நொறுக்கி துவம்சம் செய்த பாகிஸ்தான் தங்களை நம்பர் ஒன் அணி என்பதற்கு நிகராக மிரட்டியது. மறுபுறம் கேஎல் ராகுல் காயத்தால் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் காயத்திலிருந்து குணமடைந்து எவ்விதமான போட்டிகளிலும் விளையாடாமல் நேரடியாக ஆசிய கோப்பையில் களமிறங்குவது இந்திய அணியின் மிடில் ஆர்டரை பலவீனப்படுத்தியுள்ளது.

- Advertisement -

பாபர் கஷ்டப்படுவாரு:
அதனால் அடிக்கடி கேப்டன்களை மாற்றுவது சோதனைகளை செய்வது போன்றவற்றால் தங்களை தாங்களே அழித்துக் கொண்டிருக்கும் இந்தியாவை இந்த ஆசிய மற்றும் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் நிச்சயம் தோற்கடிக்கும் என அந்நாட்டை சேர்ந்த நிறைய முன்னாள் வீரர்கள் சவால் விட்டு வருகிறார்கள். அதை விட தற்சமயத்தில் நல்ல ஃபார்மில் இருக்கும் இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஷாஹின் அப்ரிடி 2021 டி20 உலகக் கோப்பை போல இந்திய டாப் ஆர்டரில் இருக்கும் வலது கை பேட்ஸ்மேன்களான ரோகித், கில், விராட் கோலி ஆகியோரை தெறிக்க விட்டு பாகிஸ்தானை வெற்றி பெற வைப்பார் என வெளிநாடுகளைச் சேர்ந்த முன்னாள் வீரர்களும் கணித்து வருகிறார்கள்.

அந்த கருத்துக்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் கேப்டன் பாபர் அசாம் இந்தியாவின் நட்சத்திர சீனியர் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை எதிர்கொள்வதற்கு தடுமாறுவார் என முகமது கைப் வித்தியாசமான கருத்தை தெரிவித்துள்ளார். குறிப்பாக கம்பேக் கொடுத்துள்ள பும்ராவை விட 2023 ஐபிஎல் தொடரில் ஊதா தொப்பியை வென்று தொடர்ந்து விளையாடி வருவதால் நல்ல ஃபார்மில் இருக்கும் ஷமி நிச்சயம் பாபர் அசாமை திணறடிப்பார் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“முகமது ஷமி சிறப்பான பவுலர். அவருடைய ஃபார்ம் தற்போது நன்றாகவே இருக்கிறது. குறிப்பாக சமீப காலங்களில் பும்ரா இல்லாத போதிலும் அவர் சிறப்பாகவே பந்து வீசினார். மேலும் ஐபிஎல் தொடரிலும் அவருடைய ஃபார்ம் சிறப்பாக இருந்தது. எனவே நிறைய திறமைகளை கொண்டுள்ள அவரை எதிர்கொள்வதற்கு பாபர் அசாம் மிகவும் அதிகமாக சிரமப்படுவார் என்பது என்னுடைய கருத்தாகும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: IND vs PAK : இந்தியா பாக் போட்டி. ஷாஹீன் அப்ரிடி விளையாடமாட்டாரா? – வெளியான உண்மை விவரம் இதோ

அவர் கூறுவது போல கடந்த 10 வருடங்களாக 3 வகையான இந்திய அணியிலும் விளையாடி வரும் ஷமி 2019 உலகக்கோப்பையிலும் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்து சிறப்பாக செயல்பட்டார். எனவே தம்முடைய அனுபவம் மற்றும் ஃபார்ம் ஆகியவற்றால் பாகிஸ்தான் கேப்டனுக்கு அவர் மிகப்பெரிய சவாலை கொடுப்பார் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement