
ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் பிப்ரவரி 7ஆம் தேதி துவங்குகிறது. அந்தத் தொடரில் தங்களது போட்டிகளை இந்தியாவில் விளையாட மாட்டோம் என்று வங்கதேசம் அறிவித்துள்ளது. சில வாரங்களுக்கு முன் வங்கதேசத்தில் இந்து மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிலர் இயற்கை எய்தியதாக செய்திகள் வெளிவந்தன.
அதற்கு இந்தியாவை சேர்ந்த சில ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதனுடைய ஒரு பகுதியாக வங்கதேசத்தை சேர்ந்த முஸ்தஃபீஸர் ரஹ்மான் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாடக்கூடாது என்று எதிர்ப்புகள் எழுந்தன. அதனால் 9.20 கோடிக்கு வாங்கப்பட்ட ரஹ்மானை பிசிசிஐ அறிவுரையின் பேரில் கொல்கத்தா நிர்வாகம் தங்களுடைய அணியிலிருந்து விடுவித்தது.
தற்போது அதற்கு பதிலடியாகவே இந்தியாவுக்கு வந்து உலகக் கோப்பையில் விளையாட மாட்டோம் என்று அறிவித்துள்ள வங்கதேசம் ஐபிஎல் போட்டிகளையும் தங்களுடைய நாட்டில் ஒளிபரப்பு தடை விதித்துள்ளது. அத்துடன் தங்களது போட்டிகளை இலங்கையில் நடத்த அனுமதிக்குமாறு ஐசிசி அமைப்புக்கு வங்கதேசம் கோரிக்கை வைத்துள்ளது. மேலும் 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் தங்களது நாட்டு அம்பையர்களை இந்தியாவுக்கு சென்று அனுமதிக்க மாட்டோம் என்றும் வங்கதேசம் முடிவெடுத்துள்ளது.
இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு வங்கதேச வீரர்களுக்கு வழங்கும் ஸ்பான்சர்ஷிப்பை புதுப்பிப்பதை நிறுத்த எஸ்ஜி நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சான்ஸ்பெரில் கிரீன்லேண்ட்ஸ் எனப்படும் விளையாட்டு உபகரணங்கள் தயாரிக்கும் எஸ்ஜி இந்திய நிறுவனம் உலகம் முழுவதிலும் பல வீரர்களுக்கு ஸ்பான்சர்ஷிப் செய்து வருகிறது.
அந்த வரிசையில் வங்கதேசத்தை சேர்ந்த கேப்டன் லிட்டன் தாஸ், மோனிமுல் ஹைக், யாசிர் ரபி போன்ற வீரர்களுக்கு எஸ்ஜி நிறுவனம் ஸ்பான்சராக இருந்து வருகிறது. தற்போது அந்த ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களை புதுப்பிக்காமல் நிறுத்திக்கொள்ள எஸ்ஜி நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தெரிய வருகிறது. இது பற்றி வங்கதேசத்தை சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத ஒரு வீரர் டெலிகோமாசியா எனும் வங்கதேச இணையத்தில் பேசியது பின்வருமாறு.
இதையும் படிங்க: ஹர்ஷித் ராணாவை விட இவர்தான் பெஸ்ட்.. அவரை பர்ஸ்ட் விளையாட வையுங்க – ராபின் உத்தப்பா கருத்து
“வரும் நாட்களில் அது நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அது போன்ற மற்ற விளையாட்டு உபகரணங்கள் தயாரிப்பாளர்களும் எங்களுடைய கிரிக்கெட்டர்களுக்கு ஸ்பான்சர்ஷிப் செய்வதிலிருந்து வெளியேறுவார்கள் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார். இதிலிருந்து இந்திய நிறுவனம் வழங்கும் பணத்தில் இந்தியாவையே எதிர்க்க துணிந்து விட்டார்களா? என்ற நோக்கத்தில் எஸ்ஜி நிறுவனம் ஸ்பான்சர்ஷிப்பை நிறுத்த முடிவெடுத்துள்ளது என்றால் மிகையாகாது.