இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது வரும் ஜனவரி 11-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் விளையாட இருக்கும் இரண்டு அணிகளை சேர்ந்த வீரர்களும் தற்போது வடோதரா நகரில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் விளையாட இருப்பதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.
ஹர்ஷித் ராணாவை விட இவர்தான் பெஸ்ட் : ராபின் உத்தப்பா கருத்து
இந்நிலையில் இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதன்மை வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ராவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் குழுவே இந்த தொடரில் விளையாட இருக்கிறது. அந்த வகையில் இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக இடம் பிடித்துள்ளனர்.
இதில் முகமது சிராஜ் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறார். அவருடன் இணைந்து விளையாடப்போகும் அந்த இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர் யார்? என்பது தான் பலரது கேள்வியாகவும் இருந்து வருகிறது.
இந்திய அணி அதிகமாக ஹர்ஷித் ராணாவை ஆதரித்து வருவதால் அவரே விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஹர்ஷித் ராணாவை தாண்டி அர்ஷ்தீப் சிங் தான் ஒருநாள் போட்டிகளில் முதன்மை வீரராக விளையாட வேண்டும் என்று ராபின் உத்தப்பா சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : ஹர்ஷித் ராணாவை ஒரு பந்துவீச்சாளராக எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அவர் பின்வரிசையில் பேட்டிங் செய்யக்கூடியவர் என்று நினைத்து இந்திய அணி அவருக்கு அதிகளவில் வாய்ப்புகளை வழங்குகிறது. ஆனால் அவரைவிட அர்ஷ்தீப் சிங் தான் மிகச்சிறப்பான பந்துவீச்சாளர்.
இதையும் படிங்க : சஞ்சு சாம்சன் இடத்துல ஒரு முழு சீசன் முழுசா வைபவ் சூர்யவன்ஷி பொளக்கப்போறான் – அஷ்வின் பகிர்ந்த பதிவு
அதோடு அவரால் அதிரடியாக விளையாட முடியாது என்றாலும் ஓரளவு பேட்டிங் செய்ய முடியும். என்னை பொறுத்தவரை அக்சர் பட்டேல் வரை பேட்டிங் இந்திய அணியில் இருப்பதால் முழுநேர முதன்மை வேகப்பந்து வீச்சாளராக ஹர்ஷித் ராணாவை தாண்டி அர்ஷ்தீப் சிங் தான் இந்திய அணிக்கு சரியான தேர்வாக இருப்பார் என்று ராபின் உத்தப்பா கூறியுள்ளார்.



