சஞ்சு சாம்சன் இடத்துல ஒரு முழு சீசன் முழுசா வைபவ் சூர்யவன்ஷி பொளக்கப்போறான் – அஷ்வின் பகிர்ந்த பதிவு

Ashwin and Vaibhav
- Advertisement -

இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 14 வயதில் அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி மிகக் குறைந்த வயதில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். அதோடு ஐபிஎல் போட்டியில் தான் சந்தித்த முதல் பந்தில் சிக்ஸ் அடித்த அவர் அதற்கடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது சதமடித்து அசத்தியிருந்தார்.

சஞ்சு சாம்சனின் இடத்தில் வைபவ் சூர்யவன்ஷி அசத்தப்போறாரு : அஷ்வின் பதிவு

குறிப்பாக அந்த போட்டியில் 38 பந்துகளில் 101 ரன்களை குவித்து ஐபிஎல் போட்டிகளில் அதிவேகமாக சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தி இருந்தார். கடந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக 7 போட்டிகளில் விளையாடிய அவர் 200+ ஸ்ட்ரைக் ரேட்டுடன் 252 ரன்கள் குவித்திருந்தார். அதில் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் அடங்கும்.

- Advertisement -

அதுமட்டும் இன்றி 2025 ஐபிஎல் தொடரில் 24 சிக்ஸர்கள் மற்றும் 18 பவுண்டரிகளை அடித்திருந்தார். துவக்க வீரராக களமிறங்கி பயமற்ற அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் அவர் எதிர்கால நட்சத்திர வீரராக பார்க்கப்படும் வேளையில் தற்போது இந்திய 19 வயது உட்பட்டோர் அணிக்காகவும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி வருகிறார்.

குறிப்பாக போட்டிகள் எங்கு நடைபெற்றாலும் அடுத்தடுத்த சதங்களை அடித்து நொறுக்கி வருகிறார். இப்படி பயமற்ற அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அவர் மிக விரைவாக இந்திய அணிக்கு அறிமுகமாக வேண்டும் என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது 14 வயதே நிரம்பியுள்ள வைபவ் சூர்யவன்ஷி இந்த ஆண்டு நடைபெறவுள்ள 2026 ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் இடத்தை பூர்த்தி செய்து வெளுத்து கட்டப் போகிறார் என இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சில கருத்துக்களை தனது சமூகவலைதளம் மூலமாக பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அஷ்வின் பகிர்ந்த பதிவில் குறிப்பிட்டதாவது :

இதையும் படிங்க : இந்திய அணியில் தொடர்ந்து நீடிக்க முடியாமல் ருதுராஜ் கெய்க்வாட் தவிக்க என்ன காரணம்? – ராபின் உத்தப்பா கருத்து

வைபவ் சூர்யவன்ஷி கடைசியாக விளையாடிய 7 போட்டிகளில் நான்கு சதங்களையும், இரண்டு அரைசதங்களை அடித்துள்ளார். அதிலும் குறிப்பாக அவர் 200+ ஸ்ட்ரைக் ரேட்டுக்கு மேல் விளையாடி வருவதால் இந்த ஆண்டு நடைபெறவுள்ள 2026 ஐபிஎல் தொடரின் முழு சீசனும் அவர் சஞ்சு சாம்சன் இடத்தில் வெளுத்து கட்டப்போகிறார். நிச்சயம் இந்த ஐபிஎல் தொடரில் அவரது ஆட்டம் மிகப் பிரமாதமாக இருக்கப்போகிறது என்றும் அவரை பாராட்டி குறிப்பிட்டுள்ளார்.

Advertisement