இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஜனவரி 11-ஆம் தேதி வடோதரா நகரில் துவங்கவுள்ளது. இந்த தொடருக்காக தற்போது இந்திய அணியின் வீரர்கள் வடோதரா சென்றடைந்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் சில தினங்களில் ஆரம்பிக்கவுள்ள இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணியில் நீடிக்காமல் போக இதுவே காரணம் : ராபின் உத்தப்பா
இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் இருந்தே இந்த அணித்தேர்வின் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக ருதுராஜ் கெய்க்வாட் இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இடம்பெறாதது குறித்து பலரும் பேசி வருகின்றனர்.
ஏனெனில் கடைசியாக நடைபெற்று முடிந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் சதம் விளாசியிருந்த ருதுராஜ் கெய்க்வாட் மீண்டும் ஒருநாள் அணியிலிருந்து கழட்டி விடப்பட்டுள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர் அணிக்குள் வந்தது நல்லது என்றாலும் இப்படி ருதுராஜ் கெய்க்வாட் நீக்கப்பட்டது பலரது மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ந்து இந்திய அணியில் நீடிக்க வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து ராபின் உத்தப்பா சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்திய அணியில் பல திறமையான வீரர்களுக்கு இடையே பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைப்பது என்பது மிகவும் கடினம்.
அப்படி தனக்கு கிடைத்த ஒரு சில வாய்ப்புகளிலும் ருதுராஜ் கெய்க்வாட் அந்த நேரத்தில் பார்ம் அவுட்டானது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. அதன் காரணமாகவே அவர் இந்திய அணியில் நீடிக்க முடியாமல் தவித்து வருகிறார். பொதுவாகவே ருதுராஜ் கெய்க்வாட் மிகச்சிறப்பான பார்முடன் பேட்டிங் செய்து வரும் வேளையில் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கிறது.
இதையும் படிங்க : அந்த 5 பேரை தவிர்த்து ஆஸி மட்டுமில்ல.. இந்தியாவையும் ஜெய்க்க முடியாது.. இங்கிலாந்தை விசாரிப்பது பற்றி பீட்டர்சன்
ஆனால் அப்படி தனக்கு கிடைக்கும் வெகு சில வாய்ப்புகளில் அந்த நேரத்தில் அவர் சோபிக்க தவறியதாலேயே தொடர்ந்து இந்திய அணியில் நீடிக்க முடியாமல் இருக்கிறார். இந்திய அணியில் தொடர்ந்து நீடிக்க தொடர்ச்சியான சிறப்பான ஃபார்ம் இருக்க வேண்டியது அவசியம் என தான் கருதுவதாக ராபின் உத்தப்பா கூறியது குறிப்பிடத்தக்கது.



