இம்முறை மிஸ் ஆகக்கூடாது.. தெ.ஆ மண்ணில் சரித்திரம் படைக்க பிசிசிஐ கையிலெடுக்கும் பிளான்

- Advertisement -

மிகப்பெரிய எதிர்பார்ப்பு மத்தியில் 2023 உலகக் கோப்பை தொடரில் தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதை முடித்துக் கொண்டு தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா அங்கு 2 போட்டிகள் கொண்ட முக்கியமான டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இத்தொடர் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறுகிறது.

அதை விட இந்த சுற்றுப்பயணத்தில் காலம் காலமாக ஏங்கி வரும் மாபெரும் சரித்திர வெற்றியை தென்னாப்பிரிக்க மண்ணில் இந்தியா சாதிக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஏனெனில் 2019/20, 2020/21 என அடுத்தடுத்த வருடங்களில் சவாலான ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடர்களை வென்றுள்ள இந்திய அணி இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற சவாலான நாடுகளிலும் இதற்கு முன் குறைந்தபட்சம் ஒரு டெஸ்ட் தொடரையாவது வென்றுள்ளது.

- Advertisement -

பிசிசிஐ பிளான்:
ஆனால் தென்னாபிரிக்க மண்ணில் மட்டும் 1992 முதல் விளையாடி வரும் இந்தியா இதுவரை ஒரு முறை கூட டெஸ்ட் தொடரில் வெற்றி கண்டதில்லை. குறிப்பாக கடந்த 2021/22 சுற்றுப்பயணத்தில் முதல் போட்டியில் வென்ற இந்தியா அதன் பின் கடைசி 2 போட்டியில் தோல்வியை சந்தித்து கோப்பையை வெல்லும் பொன்னான வாய்ப்பை கோட்டை விட்ட நிலையில் விராட் கோலி சர்ச்சைக்குரிய முறையில் கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்தது ரசிகர்களுக்கு மறக்க முடியாத தருணங்களாக அமைந்தது.

இந்நிலையில் இம்முறை தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வதற்காக இந்தியா ஏ அணியை முன்கூட்டியே அந்நாட்டுக்கு அனுப்ப பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதாவது இந்த தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் டிசம்பர் 10 முதல் 21 வரை 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடும் இந்தியா அதை தொடர்ந்து தான் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

- Advertisement -

எனவே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அஸ்வின், ரகானே, ஜெயதேவ் உனட்கட் போன்ற சீனியர் வீரர்கள் அடங்கிய இந்தியா ஏ அணி தென்னாபிரிக்கா ஏ அணிக்கு எதிராக 4 நாட்கள் கொண்ட 3 பயிற்சி டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு பிசிசிஐ ஏற்பாடு செய்ய உள்ளது. அந்த அணியில் சாய் சுதர்சன், கேஎஸ் பரத், உபேந்திரா யாதவ், சௌரப் குமார், கேஎஸ் பரத், யாஸ் துள் போன்ற வீரர்களும் இடம் பெறுவார்கள் என்று தெரிய வருகிறது.

இதையும் படிங்க: ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 2 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச – பிளேயிங் லெவன் இதோ

குறிப்பாக தென்னாப்பிரிக்க மண்ணில் நிலவும் சூழ்நிலைகளில் முன்கூட்டியே அறிந்து அதற்கேற்றார் போல் அஸ்வின் போன்ற முக்கிய வீரர்கள் தங்களை உட்படுத்திக் கொள்வதற்காக பிசிசிஐ இத்தொடரை நடத்துமாறு தென்னாப்பிரிக்கா வாரியத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் அணி விவரம் விரைவில் வெளியாகும் என்று பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ நிர்வாகி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement