ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 2 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச – பிளேயிங் லெவன் இதோ

IND-vs-AUS
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது டி20 போட்டியானது நாளை நவம்பர் 26-ஆம் தேதி நாளை விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை பெறும் முனைப்புடன் இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது.

அதேவேளையில் முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாகவும் இந்த தொடரை ஒன்றுக்கொன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்யம் முனைப்புடனும் ஆஸ்திரேலிய அணி தயாராகி வருவதால் நாளைய இந்த போட்டி இரு அணிகளுக்குவே மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் நாளைய இந்த இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்பதே ரசிகர்கள் அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இந்நிலையில் நாளைய இந்த இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவனை இங்கு காணலாம். அந்த வகையில் ஏற்கனவே இந்திய அணி முதல் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்டுத்தி வெற்றி பெற்றுள்ளதால் அணியில் பெரிய மாற்றம் இருக்காது என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

அப்படி இருந்தால் ஒருவேலை ரவி பிஷ்னாயிற்கு பதிலாக தமிழக வீரர் வாஷிங்க்டன் சுந்தர் இடம் பெறலாம் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. அதைத்தவிர்த்து பெரிய இருக்காது என்று தெரிகிறது. அதன்படி நாளைய ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : சந்தேகமே வேண்டாம்.. கண்டிப்பா அந்த சீரிஸ்ல விராட் கோலி விளையாடுவாரு.. சல்மன் பட் நம்பிக்கை

1) ருதுராஜ் கெய்க்வாட், 2) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 3) இஷான் கிஷன், 4) சூரியகுமார் யாதவ், 5) திலக் வர்மா, 6) ரிங்கு சிங், 7) அக்சர் படேல், 8) ரவி பிஷ்னாய்/வாஷிங்க்டன் சுந்தர், 9) அர்ஷ்தீப் சிங், 10) முகேஷ் குமார், 11) பிரசித் கிருஷ்ணா.

Advertisement