டி20 உலககோப்பையை நாம ஜெயிக்கனும்னா இனிமே அவங்க 2 பேரை கழட்டிவிட்டா தான் முடியும் – பி.சி.சி.ஐ நிர்வாகி கருத்து

INDia
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியானது கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த ஒரு ஐசிசி கோப்பையை கைப்பற்றாமல் இருந்து வருவது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவு ஏமாற்றத்தை அளித்து வருகிறது. இதன் காரணமாக இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரை கைப்பற்றும் முனைப்புடன் தற்போது இந்திய அணி தயாராகி வருகிறது. இந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடரானதும் நடைபெறவுள்ளது.

IND

- Advertisement -

இந்நிலையில் இந்தியாவில் நடைபெற இருக்கும் இந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் அடுத்த ஆண்டு நடைபெறயிருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்காக ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக புதிய தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட இருக்கும் நபர் இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா உட்பட சீனியர் வீரர்கள் சிலரை அழைத்து அவர்களின் டி20 எதிர்காலம் குறித்து பேச இருப்பதாகவும் பிசிசிஐ முக்கிய நிர்வாகி ஒருவர் சில தகவல்களை கூறியுள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில் : 50 ஓவர் உலககோப்பை தொடர் முடிந்து டி20 உலக கோப்பை அணியை தயார் செய்தும் விதமாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரிடம் இந்திய நிர்வாகம் பேச உள்ளது. அவர்கள் இருவருமே பெரிய வீரர்கள் தான் என்றாலும் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் விளையாடி, ஐபிஎல் தொடரிலும் விளையாடினால் அது அவர்களின் ஆட்டத்திறனை பாதிக்கும். அதிக பணிச்சுமையையும் எதிர்கொள்வார்கள்.

Rohith-1

எனவே அவர்களது வயதை கணக்கில் கொண்டு இனி டி20 தொடர்களில் அவர்களை தேர்ந்தெடுக்கப் போவதில்லை என்றும் இந்திய டி20 அணியில் இருந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை கழட்டிவிடப்போவதாக தெரிகிறது. அதோடு 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் ரோஹித் கேப்டன் பதவியில் இருந்து மாற்றப்பட்டு அவரது இடத்திற்கு ஹார்திக் பாண்டியா கொண்டு வரப்பட திட்டங்கள் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

அடுத்த உலக கோப்பை டி20 தொடருக்குள் இந்திய அணி 61 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. எனவே இந்த போட்டிகளில் இந்திய அணியை இளம் வீரர்களைக் கொண்டு தயார்படுத்தினால் அடுத்த கோப்பையை வெல்லலாம் என்பதற்காக இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் வெற்றி பெற்ற நாம் அதற்கு அடுத்து இதுவரை கோப்பையை கைப்பற்றாமல் இருந்து வருகிறோம்.

இதையும் படிங்க : IND vs WI : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடரில் கண்டிப்பா இந்த 2 வீரர்களுக்கு இடமில்லை – பி.சி.சி.ஐ திட்டவட்டம்

எனவே ஐபிஎல் தொடர்களில் துடிப்புடன் சிறப்பாக விளையாடி வரும் வீரர்களைக் கொண்டு நல்ல இளம் அணியை செட் செய்து அடுத்த கோப்பையை கைப்பற்றவே இந்த முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக அந்த பெயர் குறிப்பிடப்படாத பிசிசிஐ அதிகாரி சில தகவல்களை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement